Home தமிழகம் கொரோனா என்ற கொடிய அரக்கனை வீழ்த்துவோம்! தீபாவளிக்கு ஓபிஎஸ் வாழ்த்து

கொரோனா என்ற கொடிய அரக்கனை வீழ்த்துவோம்! தீபாவளிக்கு ஓபிஎஸ் வாழ்த்து

தமிழக மக்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் என துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படுவதை முன்னிட்டு, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மக்களுக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “தமிழக மக்களின் உயிரிலும்,உணர்விலும் இரண்டற கலந்து மக்களால் நான், மக்களுக்காகவே நான் என தனது இறுதி மூச்சு உள்ளவரை மக்கள் நலனுக்காகவே தன்னை அர்ப்பணித்த மக்கள் தலைவி இதய தெய்வம் மாண்புமிக அம்மாவின் பொற்பாதங்களை வணங்குகிறேன். நரகாசுரனை பகவான் கிருஷ்ணர் வதம் செய்ததை போல கொரோனா என்ற கொடிய அரக்கனை வெல்ல இந்த தீப ஒளி திருநாளில் அனைவரும் சபதம் ஏற்போம். எத்தனையோ இன்னல்களையும், இடையூறுகளையும் கடந்து வந்த நாம் இதையும் கடந்துவருவோம். சமூக இடைவெளியை கையாண்டு, தீபாவளி திருநாளை கொண்டாடுவோம். வருங்காலங்களில் அனைவரின் வாழ்க்கையும் வண்ணமயமாகவும், சர்க்கரை இனிப்பை போல வாழ்க்கை செழித்தோங்கட்டும், தீப ஒளி போல அனைவரின் வாழ்விலும் சுடர் விடட்டும். இந்த தீப ஒளி திருநாள் ஒவ்வொருவர் இல்லங்களிலும் துன்பத்தை நீக்கட்டும். இன்பங்களும் இனிய நிகழ்வுகளும் களைகட்டும். எவ்வித பாகுபாடும் இன்றி, ஏற்றதாழ்வும் இன்றி தமிழக மக்கள் அனைவரும் வலமும் நலமும் பெற்று இன்புற்று வாழ வாழ்த்துகிறேன்” எனக் கூறியுள்ளார்.

மாவட்ட செய்திகள்

Most Popular

வெறும் வயிற்றில் எலுமிச்சை சாரு அருந்துவது நல்லதா… கெட்டதா?

காலையில் எழுந்ததும் காபி, டீ, எனர்ஜி டிரிங்க்ஸ் அருந்துவதை பலரும் வழக்கமாக வைத்துள்ளனர். உடலை ஆரோக்கியமாக வைக்க நினைக்கும் பலர் தேன் கலந்த வெந்நீர், எலுமிச்சை நீர், இளநீர், நீராகாரம்,...

நாளை 166 இடங்களில் 19,073 சுகாதாரப்பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி

தமிழகத்தில் நாளை 166 இடங்களில் சுகாதாரப் பணியாளர்களுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. இதில் 160 இடங்களில் கோவிஷீல்டு மருந்துகளும் 6 இடங்களில் கோவேக்சினும் வழங்கப்பட உள்ளன.

“எம்ஜிஆா், ஜெயலலிதா போன்ற மனித நேயமிக்க தலைவா்கள் வரிசையில் எடப்பாடி பழனிச்சாமி”

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஊஞ்சப்பாளையத்தில் சமுதாய கட்டிடத்திற்கு பூமிபூஜை செய்து கட்டிடப்பணிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கிவைத்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்...

“2006 தேர்தலில் 2 ஏக்கர் இலவச நிலம் வழங்கப்படும் என்ற திமுகவின் அறிவிப்பு என்ன ஆனது?”

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே செய்தியாளர்களிடம் பேசிய தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ, “அதிமுக இணைய வேண்டும் என்பது குருமூர்த்தி கருத்து, அதிமுக தனித்தன்மையுடன் இருக்கிறது. யார்...
Do NOT follow this link or you will be banned from the site!