“ஓபிஎஸ் எங்களோடு தான் கடைசிவரை இருப்பார்” : அமைச்சர் ஜெயக்குமார்

 

“ஓபிஎஸ் எங்களோடு தான் கடைசிவரை இருப்பார்” :  அமைச்சர் ஜெயக்குமார்

திமுகவின் B-டீமாக சசிகலாவும், தினகரனும் செயல்படுகின்றனர் என்று அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

“ஓபிஎஸ் எங்களோடு தான் கடைசிவரை இருப்பார்” :  அமைச்சர் ஜெயக்குமார்

இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமாரிடம் சசிகலா வருகை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பேசிய அவர், “மிகப்பெரிய இயக்கம் இது; கொசு, ஈக்கெல்லாம் பயப்படுபவர்கள் நாங்கள் கிடையாது. சசிகலா வருகையால் எங்களுக்கு எந்த பதற்றமும் இல்லை; வெளியே வந்தபின் சசிகலா டிடிவியிடம் கணக்கு கேட்பார் என்பதால் தினகரன் தான் பதற்றத்தில் உள்ளார். சசிகலா அ.தி.மு.க அலுவலகத்திற்குள் நுழைந்தால் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நகைச்சுவை நடிகர் வடிவேல் இல்லாத குறையை ஸ்டாலின் தீர்த்து வைக்கிறார். திமுகவின் B-டீமாக சசிகலாவும், தினகரனும் செயல்படுகின்றனர்” என்றார்.

“ஓபிஎஸ் எங்களோடு தான் கடைசிவரை இருப்பார்” :  அமைச்சர் ஜெயக்குமார்

தொடர்ந்து பேசிய அவரிடம் ஓபிஎஸ் நிலைப்பாடு என்ன என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “ஓபிஎஸ் 100% எங்களோடு தான் கடைசிவரை இருப்பார் என அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அமைச்சர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் ஒற்றுமையுடன் உள்ளோம். ஒன்றரை கோடி தொண்டர்கள் கொண்ட இயக்கம் அதிமுக. இதில் எந்த புல்லுருவியும் நுழைய முடியாது” என்றார்.

“ஓபிஎஸ் எங்களோடு தான் கடைசிவரை இருப்பார்” :  அமைச்சர் ஜெயக்குமார்

அதிமுகவில் ஓபிஎஸ் ஓரங்கட்டப்படுவதாக பேசப்படும் நிலையில் அவர், முதல்வர் பதவி கிடைக்காத அதிருப்தியில் தேர்தல் நேரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகிறது. சசிகலா வருகை, அதிமுக கொடி என பீதியில் இருக்கும் தலைமை கழகம் ஓபிஎஸும் முரண்டு பிடித்தால் என்ன செய்வதென்று அக்கட்சியின் பேனர்கள், போஸ்டர்களில் ஈபிஎஸுக்கு நிகராக ஓபிஎஸுக்கும் முக்கியத்துவம் அளித்துள்ளது கவனிக்கத்தக்கது.