முதல்வர் ஸ்டாலின் உத்தரவுக்கு ஓபிஎஸ் வரவேற்பு!

 

முதல்வர் ஸ்டாலின் உத்தரவுக்கு  ஓபிஎஸ் வரவேற்பு!

கடைகள், வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டதற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் உத்தரவுக்கு  ஓபிஎஸ் வரவேற்பு!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கு இன்று முதல் வருகின்ற 9ம் தேதி வரை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடுமையாக நடைமுறைப்படுத்த மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், சில குறிப்பிட்ட பகுதிகளில் அதிக அளவில் கூட்டம் சேர்வது தொடர்ந்து காணப்பட்டால் அப்பகுதி மாவட்ட ஆட்சியரும் நகராட்சி ஆணையர்கள் காவல்துறையினர் அப்பகுதியை மூடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதன் காரணமாக சென்னையில் 9 இடங்களில் அனைத்து கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் நேற்று முதல் அடைக்கப்பட்டன. சென்னை தியாகராய நகர் ரங்கநாதன் தெரு, வடக்கு உஸ்மான் சாலை, ஜாம்பஜார் மார்க்கெட் சாலை, பாரிமுனை குறளகம், ராயபுரம் கல்மண்டபம் சாலை பகுதிகள், அமைந்தகரை மார்க்கெட் பகுதி , செங்குன்றம் மார்க்கெட் உள்ளிட்ட கடைகள் மூடப்பட்டன.

முதல்வர் ஸ்டாலின் உத்தரவுக்கு  ஓபிஎஸ் வரவேற்பு!

இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், “சென்னையில் 9 இடங்களில் கடைகள் சில வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டது வரவேற்கத்தக்கது. தடை விதிக்கப்பட்ட பகுதிகளில் கட்டுப்பாடுகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்படுவது 100% உறுதி செய்து மூன்றாவது அலையில் இருந்து மக்களை காக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.