ஓபிஎஸ் வெற்றி செல்லாது – வாக்காளர் மிலானி பரபரப்பு

 

ஓபிஎஸ் வெற்றி செல்லாது – வாக்காளர் மிலானி பரபரப்பு

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் போடி தொகுதியில் போட்டியிட்டு வென்றார் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம். அந்த வெற்றி செல்லாது என்று அறிவிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு இருக்கிறது. போடி தொகுதியின் வேட்பாளரான ஓபிஎஸ் வெற்றி செல்லாது என்று அறிவிக்க கோரி ஐகோர்ட்டில் வாக்காளர் மிலானி வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

ஓபிஎஸ் வெற்றி செல்லாது – வாக்காளர் மிலானி பரபரப்பு

கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டமன்றத் தேர்தலில் முன்னாள் துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வம் தேனி மாவட்டத்திலுள்ள போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். அந்த வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி போடிநாயக்கனூர் தொகுதியை சேர்ந்த வாக்காளர் மிலானி என்பவர் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

மிலானி தொடர்ந்து இந்த வழக்கு இன்னும் ஓரிரு நாட்களில் விசாரணைக்கு வர வாய்ப்பு இருக்கிறது என்று தகவல்.

ஓபிஎஸ் வெற்றி செல்லாது – வாக்காளர் மிலானி பரபரப்பு

இந்த மிலானி இதற்கு முன்னர் அதிமுக வேட்பாளரான ரவீந்திரநாத் குமார் எம். பி.யாக வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக் கோரி வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு இன்னமும் நிலுவையில் இருக்கிறது. ஓபிஎஸ் மகன் மீது வழக்குத் தொடர்ந்த அதே மிலானிதான் தற்போது ஓபிஎஸ் வெற்றி மீதும் சந்தேகம் எழுப்பி வழக்கு தொடர்ந்தது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.