பீலா ராஜேஷின் தந்தை மரணத்திற்கு ஓபிஎஸ் இரங்கல்…

 

பீலா ராஜேஷின் தந்தை மரணத்திற்கு ஓபிஎஸ் இரங்கல்…

வணிக வரி செயலர் பீலா ராஜேஷின் தந்தையும், முன்னாள் டிஜிபியுமான வெங்கடேசன் மறைவுக்கு துணை முதல்வர் ஓபிஎஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழக சுகாதாரத் துறையின் செயலாளராக செயலாற்றிய டாக்டர் பீலா ராஜேஷ் அவர்களின் தந்தையும், சாத்தான்குளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராணி வெங்கடேசனின் கணவருமான LN வெங்கடேசன் ஐபிஎஸ் இன்று காலமானார். தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே உள்ள வாழையடி கிராமத்தை பூர்விகமாக கொண்ட இவர் முன்னாள் டிஜிபி அதிகாரியாவார்.

பீலா ராஜேஷின் தந்தை மரணத்திற்கு ஓபிஎஸ் இரங்கல்…

இந்நிலையில், பீலா ராஜேஷின் தந்தை மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள ஓபிஎஸ், தனது ட்விட்டர் பக்கத்தில், “ஓய்வு பெற்ற முன்னாள் காவல்துறை இயக்குநரும், சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் திருமதி.ராணி வெங்கடேசன் அவர்களது கணவரும், வணிக வரித்துறை செயலர் திருமதி.பீலா ராஜேஷ்
@DrBeelaIAS
அவர்களின் தந்தையுமான திரு.SN.வெங்கடேசன் அவர்கள் இன்று சென்னையில் காலமானார் என்ற செய்தியறிந்து துயரம் அடைந்தேன். அவரது பிரிவால் துயருற்று இருக்கும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.