பாய்லர் வெடித்து ஏற்பட்ட விபத்து அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது- துணை முதல்வர் பதிவு!

 

பாய்லர் வெடித்து ஏற்பட்ட விபத்து அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது- துணை முதல்வர் பதிவு!

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் செயல்பட்டு வரும் என்.எல்.சி 2 ஆவது அனல் மின் நிலையத்தில் உள்ள 5 ஆவது யூனிட்டில் இன்று காலை திடீரென பாய்லர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சென்ற தீயணைப்பு வீரர்கள், உள்ளே சிக்கியிருந்த ஊழியர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அதற்குள்ளாகவே 6 ஊழியர்கள் தீ விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 17 ஊழியர்கள் படுகாயம் அடைந்ததோடு பலர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். சமீபத்திலும் இதே போன்ற சம்பவம் நடந்ததால், என்.எல்.சியில் அலட்சியமாக நடந்து கொண்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு பல தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

பாய்லர் வெடித்து ஏற்பட்ட விபத்து அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது- துணை முதல்வர் பதிவு!

இந்த நிலையில் இச்சம்பவம் குறித்து துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், நெய்வேலி 2-ஆம் அனல் மின்நிலையத்தில் எதிர்பாராத விதமாக கொதிகலன் வெடித்து ஏற்பட்ட விபத்து அதிர்ச்சியும் மனவேதனையும் அளிக்கிறது. இக்கோர விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொண்டு, காயமடைந்தோர் விரைவில் நலம்பெற இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.