பெரியகுளத்தில் உள்ள சொந்த வீட்டில் தாங்காமல் வாடகை வீடு எடுத்து தங்கிய ஓபிஎஸ் : காரணம் இதுதானாம்!

பெரியகுளத்தில் உள்ள சொந்த வீட்டில் தாங்காமல் வாடகை வீடு எடுத்து தங்கிய ஓபிஎஸ் : காரணம் இதுதானாம்!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், தேனி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. குறிப்பாக தேனி மாவட்டத்தில் போடி, கம்பம், சின்னமனூர், தேனி, கூடலூர் ஆகிய ஐந்து நகராட்சி பகுதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல் கடந்த 21ஆம் தேதி முதல் பெரியகுளம் நகராட்சி பகுதிகளில் ஊரடங்கு அமலில் உள்ளது.

பெரியகுளத்தில் உள்ள சொந்த வீட்டில் தாங்காமல் வாடகை வீடு எடுத்து தங்கிய ஓபிஎஸ் : காரணம் இதுதானாம்!

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையிலிருந்து தனது சொந்த ஊரான தேனிக்கு வந்த துணை முதல்வர் ஓபிஎஸ் பெரியகுளத்தில் உள்ள தனது வீட்டிற்கு செல்லாமல் நேரடியாக போடிக்கு சென்று அங்கு உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அருகில் உள்ள வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளார். இதனால் ஓபிஎஸ் ஏன் பெரியகுளம் செல்லவில்லை என கேள்வி எழுந்தது.

பெரியகுளத்தில் உள்ள சொந்த வீட்டில் தாங்காமல் வாடகை வீடு எடுத்து தங்கிய ஓபிஎஸ் : காரணம் இதுதானாம்!

இதுகுறித்து வெளியான தகவலில், ஓபிஎஸ் எப்போதும் பெரியகுளம் வீட்டில்தான் தங்குவார். இல்லையென்றால் போடியில் உள்ள உள்ள தனது அலுவலக மாடியில் தங்குவார். ஆனால் இந்த முறை பெரியகுளத்தில் முழு ஊரடங்கு அமலில் இருப்பதால் நேரடியாக போடிக்கு வந்த ஓபிஎஸ், அவரது அலுவலகத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் அங்கு உள்ள வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கி இருப்பதாக தெரிகிறது.

பெரியகுளத்தில் உள்ள சொந்த வீட்டில் தாங்காமல் வாடகை வீடு எடுத்து தங்கிய ஓபிஎஸ் : காரணம் இதுதானாம்!

நேற்று மாலை அங்குள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகள் மட்டத்திலான ஆலோசனை கூட்டத்தில் ஓபிஎஸ் கலந்துகொண்டார். இதனால்தான் அவர் போடிக்கு சென்றதாக தெரிகிறது. மேலும் அவரின் குடும்ப உறுப்பினர்கள் பெரியகுளம் வீட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது.