கிராமசபை கூட்டம் நடத்த ஸ்டாலின் என்ன மகாத்மா காந்தியா?

 

கிராமசபை கூட்டம் நடத்த ஸ்டாலின் என்ன மகாத்மா காந்தியா?

ஓபிஎஸ் முன்னிலையில் ரஜினி மக்கள் மன்றத்தினர் அதிமுகவில் இணைந்தனர்.

கிராமசபை கூட்டம் நடத்த ஸ்டாலின் என்ன மகாத்மா காந்தியா?

அதிமுக சார்பில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் சென்னை திருவெற்றியூரில் நடைபெற்றது. இதில் துணை முதல்வர் ஓபிஎஸ் கலந்துகொண்டார். அப்போது கூட்டத்தில் பேசிய அவர், தமிழ்மொழி வளர்ச்சிக்காக அதிமுக அரசு பல்வேறு நலத்திட்டங்களை வகுத்துள்ளது. திமுக ஆட்சியில் இருந்தபோது, தமிழகத்திற்கு ஆபத்து தரக்கூடிய திட்டங்களை தடுத்து நிறுத்தவில்லை. அதைவிட்டுவிட்டு தற்போது அதிமுக அரசை குற்றம் சாட்டிவருகிறது. நீட் தேர்வு திமுக – காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்த போது கொண்டு வந்தது தான். கிராமசபைக் கூட்டத்தை மாவட்ட ஆட்சியர் தான் நடத்த வேண்டும். ஆனால் அதை ஸ்டாலின் கிராமம் கிராமமாக சென்று நடத்தி வருகிறது. கிராமசபை கூட்டம் நடத்த ஸ்டாலின் என்ன மகாத்மா காந்தியா? என்று கேள்வி எழுப்பினார்.

கிராமசபை கூட்டம் நடத்த ஸ்டாலின் என்ன மகாத்மா காந்தியா?

இந்த நிகழ்ச்சியில் ரஜினி மக்கள் மன்றத்திலிருந்து விலகிய 500ற்கும் மேற்பட்ட தொண்டர்கள் ஓபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். அத்துடன் ஓபிஎஸுக்கு செங்கோலும், வீர வாளும் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.