“இந்த ஆண்டு தமிழகத்தில் அரசியல் புரட்சி ஏற்படும்” – துணை முதல்வர் ஓபிஎஸ் பேச்சு!

 

“இந்த ஆண்டு தமிழகத்தில் அரசியல் புரட்சி ஏற்படும்” – துணை முதல்வர் ஓபிஎஸ் பேச்சு!

2021 சட்டமன்றத் தேர்தல் அரசியல் புரட்சியை ஏற்படுத்தும் என அதிமுக செயற்குழு – பொதுக்குழு கூட்டத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்தார்.

அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று காலை 11 மணிக்கு சென்னை வானகரத்தில் இருக்கும் ஸ்ரீவாரு மண்டபத்தில் கூடியது. கூட்டத்தின் தொடக்கத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு கூட்டம் தொடங்கியது. தொடக்கத்தில் அதிமுக அரசின் நடவடிக்கைகளுக்கு பாராட்டுக்கள் தெரிவித்தும், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு கண்டனம் தெரிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து, கட்சியின் முக்கிய பிரமுகர்கள் அதிமுக அரசின் செயல்பாடுகள் குறித்தும் சட்டமன்றத் தேர்தல் குறித்தும் அக்கூட்டத்தில் பேசி வருகின்றனர்.

“இந்த ஆண்டு தமிழகத்தில் அரசியல் புரட்சி ஏற்படும்” – துணை முதல்வர் ஓபிஎஸ் பேச்சு!

இந்த நிலையில் கூட்டத்தில் பேசிய துணை முதல்வர் ஓபிஎஸ், “ஜெயலலிதாவின் பல திட்டங்கள் மூலம் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும். மக்களின் ஆதரவை அதிமுகவை நோக்கி திருப்ப வேண்டும். ஒற்றுமையோடு பணியாற்றினால் அதிமுகவின் வெற்றி உறுதி. முதல்வர் பழனிசாமி தலைமையிலான ஆட்சி மீது தமிழக மக்கள் ஆழ்ந்த நம்பிக்கை, நல்ல பெயர் வைத்துள்ளனர்’ என்று கூறினார்.

தொடர்ந்து, “கொரோனாவை விட கொடிய வைரஸ் திமுக. தமிழகத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலில் புதிய புரட்சி ஏற்படும். திமுகவை அரசியலை விட்டு அகற்ற வேண்டும். எதிர்க்கட்சியை இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும். கட்சிக்கு விசுவாசமாக இருங்கள். ஒற்றுமையுடன் செயல்படுங்கள். மனமாச்சரியங்களை கலைந்து வேறுபாடுகளை மறந்து கட்சியுடன் ஒன்றிணைந்து செயல்படுங்கள்” என்று கூறினார். மேலும், அதிமுகவில் வேஷ்டி கட்டும் ஆண்கள் உண்டு. கோஷ்டு சேர்க்கும் ஆட்களே இல்லை என்றும் இதுவரை எந்த இயக்கமும் பெறாத வெற்றியை அதிமுக பெற வேண்டும் என்றும் தெரிவித்தார்.