“வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு தற்காலிகமானது; குறைவதற்கும் வாய்ப்புள்ளது” ஓபிஎஸ் பேச்சு!!

 

“வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு தற்காலிகமானது; குறைவதற்கும் வாய்ப்புள்ளது” ஓபிஎஸ் பேச்சு!!

வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு தற்காலிகமானது என்று துணை முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

“வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு தற்காலிகமானது; குறைவதற்கும் வாய்ப்புள்ளது” ஓபிஎஸ் பேச்சு!!

சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் தீவிரமான தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் .அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக , தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளது .பாமகவை பொறுத்தவரை நீண்ட கால கோரிக்கையான கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு கோரிக்கையை நிறைவேற்றினால் அதிமுகவுடன் கூட்டணி என்று கூரையது.அதன் அடிப்படையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த சில மாதங்களுக்கு முன்பு சட்டப்பேரவையில் 10.5 சதவீத இட ஒதுக்கீடு வன்னியர்களுக்கு அளிக்கப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றினார். இந்த தீர்மானத்திற்கு ஆளுநர் பன்வாரிலால் ஒப்புதல் அளித்த நிலையில் வன்னியர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சி உண்டானது. வன்னியர் இட ஒதுக்கீட்டை அதிமுக பெற்று கொடுத்துள்ளதால் குறைந்த தொகுதியை பெற்றுக் கொள்வதாக அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டார். அதன்படி அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

“வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு தற்காலிகமானது; குறைவதற்கும் வாய்ப்புள்ளது” ஓபிஎஸ் பேச்சு!!

இருப்பினும் இந்த விவகாரம் மற்ற சமூகத்தினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இதனால் அதிமுக கூட்டணிக்கு தேர்தல் பரப்புரை செல்லும் இடங்களில் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் தேர்தல் வியூகம் குறித்து ஆங்கில நாளிதழுக்கு துணை முதல்வர் ஓபிஎஸ் அளித்த பேட்டியில், தமிழகத்தில் வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு தற்காலிகமானது தான்.சாதிவாரியாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப் பட்ட பிறகு வன்னியர் இட ஒதுக்கீடு இறுதியாகும்.சாதிவாரி கணக்கெடுப்பு குழு தரும் அறிக்கை அடிப்படையில் வன்னியர் இட ஒதுக்கீடு கூடுவதற்கும் குறைவதற்கும் வாய்ப்புள்ளது” என்றார். மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் 20 சதவீத இட ஒதுக்கீட்டில் 10.5% வன்னியர்களுக்கு தரப்பட்ட சட்டம் இயற்றப்பட்டது. இதற்கு பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த சில சமூகத்தினர் எதிர்ப்பதாக கூறப்படும் நிலையில் ஓபிஎஸ் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.