பொதுக்கூட்டத்தில் மோடியை புகழ்ந்து தள்ளிய ஓபிஎஸ்!

 

பொதுக்கூட்டத்தில் மோடியை புகழ்ந்து தள்ளிய ஓபிஎஸ்!

தமிழக சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி ஆளுங்கட்சியான அதிமுக, அதிரடியாக களத்தில் இறங்கியிருக்கிறது. தேர்தல் பிரச்சாரங்கள் இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், அதிமுக கூட்டணி கட்சியான பாஜக தலைவர் நரேந்திர மோடி வாக்கு சேகரிக்க மதுரைக்கு வந்திருக்கிறார். அங்கு நடைபெற்று வரும் பொதுக்கூட்டத்தில் மோடி, முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், அதிமுக அமைச்சர்கள், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர்.

பொதுக்கூட்டத்தில் மோடியை புகழ்ந்து தள்ளிய ஓபிஎஸ்!

கூட்டத்தில் பேசிய துணை முதல்வர் ஓபிஎஸ், தமிழகத்துக்கு பாரத பிரதமர் ஏராளமான நன்மைகளை செய்திருக்கிறார்கள். கோடிக் கணக்கான ரூபாய் மதிப்பில் திட்டங்களையும் அளித்து வருகிறார்கள். தமிழகம் மருத்துவக் கல்லூரியில் முன்னேற வேண்டும் என்பதற்காக ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள் அமைக்க அனுமதி வழங்கினார் பிரதமர் மோடி. 1500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கல்லூரி கொண்டு வர உறுதுணையாக இருந்தார் என்று மோடியை புகழ்ந்து பேசினார்.

பொதுக்கூட்டத்தில் மோடியை புகழ்ந்து தள்ளிய ஓபிஎஸ்!

தொடர்ந்து பேசிய அவர், தமிழக தாய்மார்கள் சகோதர சகோதரிகள் தான் திமுகவுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று நான் அன்போடு கேட்டுக் கொள்கிறேன். கடந்த 10 ஆண்டில் அம்மா அரசின் தொலைநோக்கு திட்டங்களால் இந்தியாவிலேயே முதலிடத்தில் தமிழகம் இருக்கிறது. தமிழகம் மீண்டும் வளர்ச்சி பெற, நன்றாக வளமாக இருக்க அம்மா அரசு மீண்டும் தமிழகத்தின் அமைந்திட வேண்டும். அதற்கு நீங்கள் அதிமுகவுக்கு இரட்டை இலைச் சின்னத்திலும் பாஜகவுக்கு தாமரை சின்னத்திலும் பாமகவுக்கு மாம்பழம் சின்னத்திலும் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதற்கிடையில், பிரதமர் மோடியை ‘ஜல்லிக்கட்டு ஹீரோ’ என்று ஓபிஎஸ் புகழாரம் சூட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.