மெரினாவில் நாள் முழுவதும் அன்னதானம், அம்மாவுக்கு படையல்! அசத்திய ஓபிஎஸ் மகன்

 

மெரினாவில் நாள் முழுவதும் அன்னதானம், அம்மாவுக்கு படையல்! அசத்திய ஓபிஎஸ் மகன்

தமிழகம் முழுவதும் இன்று ஜெயலலிதாவின் 73வது பிறந்த நாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

சென்னையில் உள்ள அதிமுக தலைமை கழகத்தில் நடந்த விழாவில் ஜெயலலிதாவின் சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து 73 கிலோ கேக்கை வெட்டினர். இதனை தொடர்ந்து பல்வேறு விபத்துகளில் உயிரிழந் 6 கழக உடன்பிறப்புகளின் குடும்பங்களுக்கு, குடும்ப நல நிதியுதவியாக தலா 3 லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 18 லட்சம் ரூபாய்க்கான வரைவோலைகளை ஓபிஎஸ், ஈபிஎஸ் வழங்கி, கழக உடன்பிறப்புகளின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறினர். அதன்பின் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமனு வழங்கப்பட்டது.

மெரினாவில் நாள் முழுவதும் அன்னதானம், அம்மாவுக்கு படையல்! அசத்திய ஓபிஎஸ் மகன்

இதனைதொடர்ந்து மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் நினைவிடத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓபன்னீர் செல்வமும் பொதுமக்கள் மார்வைக்கு திறந்துவைத்தனர். தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டிருந்த அருங்காட்சியகம் மற்றும் அறிவுசார் பூங்காவை திறந்துவைத்தனர்.

ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு இன்றைய நாள் முழுவதும் நினைவிடத்திற்கு வருவோருக்கு அன்னதானம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும் நினைவிடத்தை பராமரிக்கும் தூய்மை பணியாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்களுடன் புத்தாடைகளும் வழங்கப்பட்டன, துணை முதல் ஓ பன்னீர் செல்வத்தின் மகன் ஜெயபிரதீப் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த ஏற்பாடு பலராலும் பாராட்டப்பட்டுவருகிறது. ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கும், நினைவிடத்திற்கும் மலர் தூவி மரியாதை செலுத்திய ஜெயபிரதீப், இலையில் இனிப்பு வைத்து படையலிட்டார்.