அமைச்சர் மா.சுப்பிரமணியனை விளாசி தள்ளிய ஓபிஎஸ்!

 

அமைச்சர் மா.சுப்பிரமணியனை விளாசி தள்ளிய ஓபிஎஸ்!

நீட் தேர்வு குறித்து திமுக அரசுக்கும் அதிமுகவுக்கும் கருத்து மோதல் நிலவி வருகிறது. சமீபத்தில் பேட்டியளித்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நீட் தமிழகத்தில் நுழைந்தது ஓபிஎஸ் துணை முதல்வராக இருக்கும்போது தான். அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டது அதிமுக ஆட்சியில் தான்” என்றார். அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஓபிஎஸ் பதில் அறிக்கை விடுத்துள்ளார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியனை விளாசி தள்ளிய ஓபிஎஸ்!

அந்த அறிக்கையில், ”நீட் குறித்து மாணவர்கள் மத்தியில் குழப்ப நிலை நிலவி வருவதைச் சுட்டிக்காட்டினால், நீட் தேர்வு மற்றும் நீட் தேர்வுப் பயிற்சிகள் அதிமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்டதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியிருப்பது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதுபோல் உள்ளது. 2006 முதல் 2011 வரை திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் ஆட்சிதான் நடைபெற்றது என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். நீட் தேர்வு திமுக ஆட்சிக் காலத்தில், மத்திய அரசில் திமுக அங்கம் வகித்த காலத்தில் கொண்டுவரப்பட்டது என்பதற்கு இதைவிட ஓர் ஆதாரம் தேவையில்லை.

அமைச்சர் மா.சுப்பிரமணியனை விளாசி தள்ளிய ஓபிஎஸ்!

நீட் தேர்வுக்குப் பயிற்சி ஆரம்பிக்கப்பட்டது அதிமுக ஆட்சிக் காலத்தில்தான் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கூறி இருக்கிறார். நீட் தேர்வுக்கு வித்திட்டுவிட்டு, அதற்குப் பயிற்சி அளிப்பதைக் குறை கூறுவது எவ்விதத்தில் நியாயம்? 2010ஆம் ஆண்டே திமுக அப்போதைய மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவைத் திரும்பப் பெற்றிருந்தால், நீட் தேர்வும் வந்திருக்காது, பயிற்சியும் இருந்திருக்காது என்பதை நான் கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன். மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது விட்டுவிட்டு, இப்போது அதுகுறித்து பேசுவது ‘தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடிப்பதற்கு சமம்’ என்ற பழமொழியைத்தான் நினைவுபடுத்துகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.