“அரசின் மீதான ஏமாற்றத்தில் தற்கொலை செய்துகொள்ளும் மாணவர்கள்” – திமுகவை சாடிய ஓபிஎஸ்!

 

“அரசின் மீதான ஏமாற்றத்தில் தற்கொலை செய்துகொள்ளும் மாணவர்கள்” – திமுகவை சாடிய ஓபிஎஸ்!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் தனுஷ், அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கனிமொழி என்ற வரிசையில், இன்று வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சௌந்தர்யா நீட் தேர்வு எழுதி, முடிவுக்காகக் காத்துக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார் என்ற செய்தி மிகுந்த வருத்தத்தை அளிப்பதாக உள்ளது. இதன் மூலம், நீட் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் அனைவரும் தங்களது குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டிய, கண்காணிக்க வேண்டிய சூழ்நிலை தற்போது தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது.

“அரசின் மீதான ஏமாற்றத்தில் தற்கொலை செய்துகொள்ளும் மாணவர்கள்” – திமுகவை சாடிய ஓபிஎஸ்!

திமுக ஆட்சிக்கு வந்ததும் ‘நீட் தேர்வு ரத்து செய்யப்படும்’ என்று திமுக தலைவர்களால் மேடைக்கு மேடை முழங்கப்பட்ட வெற்று வாக்குறுதியை நம்பி, 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில், மருத்துவப் படிப்பில் சேர்ந்துவிடலாம் என்ற எண்ணத்தில் இருந்த, மாணவர்கள் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாத சூழலில் நீட் தேர்வு எழுத வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டு, மன உளைச்சலுக்கு ஆளாகி இதுபோன்ற விபரீத நடவடிக்கைகளை எடுக்கும் சூழ்நிலை தற்போது தமிழகத்தில் உருவாகியுள்ளது. மருத்துவராக நினைக்கும் மாணவ, மாணவிகளிடம் மனோதிடம் அதிகமாக இருக்க வேண்டும். ஆனால், அதற்கு மாறான சூழ்நிலை தமிழகத்தில் நிலவுகிறது.

“அரசின் மீதான ஏமாற்றத்தில் தற்கொலை செய்துகொள்ளும் மாணவர்கள்” – திமுகவை சாடிய ஓபிஎஸ்!

இதுபோன்ற சூழ்நிலை ஏற்படுவதற்கு மன அழுத்தம் காரணம் என்றாலும், ‘ஏதோ நடக்கும் என்று எதிர்பார்த்து, ஒன்றுமே நடக்கவில்லை’ என்கிறபோது, மாணவர்கள் ஏமாற்றமடைந்து, அதன் விளைவாக மன அழுத்தம் அதிகரிப்பதும் மற்றுமொரு காரணம் என்பது மறுப்பதற்கில்லை. இது மட்டுமல்லாமல், மருத்துவப் படிப்பை சமூகப் பொருளாதாரத்துக்கான ஓர் அங்கீகாரமாக பெற்றோர்கள் நினைப்பதும், மாணவர்களிடையே அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. கண்ணிலே பழுது இருந்தால் பார்வை சரியாக இருக்காது. மூக்கிலே சளி இருந்தால் நறுமணத்தை நுகர முடியாது. வாயிலே புண் இருந்தால் உணவைச் சுவைக்க முடியாது.

“அரசின் மீதான ஏமாற்றத்தில் தற்கொலை செய்துகொள்ளும் மாணவர்கள்” – திமுகவை சாடிய ஓபிஎஸ்!

அதுபோல, எண்ணம் சரியாக இல்லாவிட்டால், வாழ்க்கையின் இன்பத்தை அனுபவிக்க முடியாது. எனவே, நல்ல எண்ணங்களை மனதில் நிலைநிறுத்தி, வாழ்வில் வெற்றிப் பாதையை நோக்கி மாணவ, மாணவிகள் பீடுநடை போட வேண்டும் என்றும், தற்கொலை என்பது தீர்வல்ல என்பதை உணர்ந்து மாணவர்கள் செயல்பட வேண்டும். வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே தலையாரம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மாணவி செல்வி சௌந்தர்யாவுக்கு எனது அஞ்சலியைச் செலுத்துவதோடு, அவரது பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

“அரசின் மீதான ஏமாற்றத்தில் தற்கொலை செய்துகொள்ளும் மாணவர்கள்” – திமுகவை சாடிய ஓபிஎஸ்!

நீட் தேர்வு முடிவுகள் வெளிவருவதற்கு முன்பே இதுபோன்ற நிகழ்வுகள் நடப்பதைக் கருத்தில் கொண்டு, தமிழக முதல்வர் இதில் தனிக்கவனம் செலுத்தி, இனி வருங்காலங்களில், குறிப்பாக நீட் தேர்வு முடிவுக்குப் பிறகு, இதுபோன்ற விபரீத நிகழ்வுகளைத் தடுக்கும் வகையில், நீட் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்குக் கலந்தாய்வு வழங்கவும், அவர்களுடைய பெற்றோர்களுக்குத் தக்க அறிவுரைகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.