தமிழக அரசு அதற்கு அனுமதி வழங்கக் கூடாது – ஓபிஎஸ் கோரிக்கை!

 

தமிழக அரசு அதற்கு அனுமதி வழங்கக் கூடாது – ஓபிஎஸ் கோரிக்கை!

எண்ணெய் கிணறுகள் அமைக்க அரசு அனுமதி அளிக்கக் கூடாது என எதிர்க்கட்சித் துணை தலைவர் ஓபிஎஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஹைட்ரோகார்பன் எடுக்க கண்டுபிடிக்கப்பட்ட சிறிய எண்ணெய் வயல்கள் திட்டத்தின் கீழ் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் ஏலம், 2018ஆம் ஆண்டு இரண்டாம் ஏலம் நடைபெற்ற நிலையில் கடந்த 10ஆம் தேதி மூன்றாம் ஏலத்திற்கான அறிவிப்பு வெளியானது. 75 எண்ணெய் வயல்களை பெட்ரோலியத்துறை ஏலம் விடுகிறது. புதுக்கோட்டை பகுதியில் 463.2 சதுர கிலோ மீட்டர் நிலம் ஏலம் விடப்படுகிறது. இது குறித்து, வரும் 30 ஆம் தேதி பன்னாட்டு முதலாளிகளுக்கும் இந்திய அரசாங்கத்துக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் இதற்கு கண்டன குரல்கள் எழுந்துள்ளன.

தமிழக அரசு அதற்கு அனுமதி வழங்கக் கூடாது – ஓபிஎஸ் கோரிக்கை!

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்பாட்டு சட்டம் நடைமுறையில் இருக்கும் போதே எரிவாயு, ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க மத்திய அரசு அறிவிப்பை வெளியிடுவது கண்டனத்திற்குரியது என்றும் இந்த அறிவிப்பை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் பல தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடலூர், அரியலூர் மாவட்டங்களில் எண்ணெய் கிணறுகள் அமைக்க தமிழக முதல்வர் அனுமதி அளிக்கக்கூடாது என எதிர்க்கட்சி துணை தலைவர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான அறிவிப்பை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் காவிரி, டெல்டா சுற்றுப்பகுதி மாவட்டங்களில் வேளாண்மை அல்லாத பணிகள் நடைபெற அனுமதிக்க கூடாது என்றும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் வலியறுத்தியுள்ளார். ஏற்கனவே எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ்சும் தமிழக அரசிடம் இதனை வலியறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.