15 சீட் தான்.. தேமுதிகவுக்கு அதிமுக கிடுக்குப்பிடி!

 

15 சீட் தான்.. தேமுதிகவுக்கு அதிமுக கிடுக்குப்பிடி!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளில் தீவிரமாக களமிறங்கியிருக்கும் அதிமுக தலைமை, தற்போது தொகுதி பங்கீட்டில் பிஸியாக இருக்கிறது. தன்னுடன் கூட்டணியில் இருக்கும் பாமகவுக்கு 23 தொகுதிகளையும் பாஜகவுக்கு 20 தொகுதிகளை வழங்கியிருக்கிறது. தேமுதிகவுடன் பேச்சுவார்த்தையை நடத்திக் கொண்டிருக்கிறது. கேட்ட தொகுதிகளை அதிமுக தராததால், இதுவரை இல்லாத அளவுக்கு தொகுதி பங்கீட்டில் தேமுதிகவுக்கு இழுபறி நீடிக்கிறது.

15 சீட் தான்.. தேமுதிகவுக்கு அதிமுக கிடுக்குப்பிடி!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த 2011 சட்டப்பேரவை தேர்தலில் திமுகவை வீழ்த்தி எதிர்க்கட்சி தலைவராக அமர்ந்தார். அப்போது அதிமுக தேமுதிக 41 தொகுதிகளை தேமுதிகவுக்கு கொடுத்திருந்தது. அதே போலவே, இந்த முறையும் கொடுக்க வேண்டுமென தேமுதிக நிர்பந்தித்தது. அதை அதிமுக தலைமை ஏற்கவில்லை.

15 சீட் தான்.. தேமுதிகவுக்கு அதிமுக கிடுக்குப்பிடி!

தொடர் இழுபறியால் தேமுதிக அதிமுகவை விட்டு வெளியேற எண்ணிய போதிலும், அதிமுக அதிக இடங்களை கொடுக்க ஒப்புக் கொள்ளவில்லை. 25 தொகுதிகளாவது கொடுத்தால் தான் கூட்டணியில் இருப்போம் என பிரேமலதா அதிரடியாக பேசியிருந்த போதிலும், 15 தொகுதிகள் மட்டுமே கொடுக்க அதிமுக திட்டமிட்டிருக்கிறது.

15 சீட் தான்.. தேமுதிகவுக்கு அதிமுக கிடுக்குப்பிடி!

இந்த நிலையில், அதிமுகவுடனான தேமுதிக கூட்டணி தொடரும் என அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓபிஎஸ் தெரிவித்தார். சென்னை ராயப்பேட்டையில் இருக்கும் அதிமுக தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை தொடரும் என்றும் தொகுதி பங்கீடு தொடர்பாக தேமுதிகவுடன் இன்று மாலை பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என்றும் தெரிவித்தார். தேமுதிகவுக்கு 15 தொகுதிகளையும் 1 ராஜ்யசபா சீட்டையும் கொடுக்க அதிமுக முன்வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.