போடியில் ஓபிஎஸ் பின்னடைவு ; அதிர்ச்சியில் அதிமுக

 

போடியில் ஓபிஎஸ் பின்னடைவு ; அதிர்ச்சியில் அதிமுக

போடியில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பின்னடைவை சந்தித்துள்ளார். அங்கு திமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் முன்னிலையில் உள்ளார்.

போடியில் ஓபிஎஸ் பின்னடைவு ; அதிர்ச்சியில் அதிமுக

சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.தேனி தொகுதியில் ஆண்டிபட்டி ,போடிநாயக்கனூர், கம்பம், பெரியகுளம் என நான்கு தொகுதிகள் உள்ளன . இதில் போடிநாயக்கனூரில் திமுக சார்பில் தங்க தமிழ்ச்செல்வன், அதிமுக சார்பில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், மக்கள் நீதி மையம் சார்பில் கணேஷ்குமார், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் முத்துசாமி என 24 வேட்பாளர்கள் களம் கண்டனர்.

போடியில் ஓபிஎஸ் பின்னடைவு ; அதிர்ச்சியில் அதிமுக

இந்நிலையில் துணை முதல்வர் ஓபிஎஸ் போடியில் பின்னடைவை சந்தித்துள்ளார். போடி ஓபிஎஸ்-ன்சொந்த தொகுதி என்பதால் அங்கு மீண்டும் போட்டியிட்டார். அவரை எதிர்த்து திமுக சார்பில் தங்க தமிழ்செல்வன் களமிறக்கப்பட்டார். இந்த சூழலில் தபால் வாக்கு எண்ணிக்கையில் ஓபிஎஸ் 6414 வாக்குகளும், தங்க தமிழ்செல்வன் 6538 வாக்குகளும் பெற்றுள்ளார். இதன் மூலம் அவர் தற்போதைய நிலவரப்படி ஓபிஎஸை பின்னுக்கு தள்ளியுள்ளார்.