2021ல் அதிமுகவை ஆட்சிக் கட்டிலில் அமர வைப்பதே இலக்கு: துணை முதல்வர் ஓபிஎஸ் பேச்சு!

 

2021ல் அதிமுகவை ஆட்சிக் கட்டிலில் அமர வைப்பதே இலக்கு: துணை முதல்வர் ஓபிஎஸ் பேச்சு!

தமிழகத்தில் சட்டமன்றத்தேர்தல் நெருங்கி வருவதால், பிரதான கட்சிகளான திமுகவும் அதிமுகவும் தேர்தல் பணிகளில் தீவிரமாக இறங்கிவிட்டன. இன்னும் ஒரு சில மாதங்களில் தேர்தல் பிரச்சாரங்கள் தொடங்க உள்ளன. அதே போல வரும் டிசம்பர் மாதம் வாக்காளர் வரைவு பட்டியல் வெளியாக உள்ளது. இவ்வாறு தேர்தல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. திமுகவில் இருந்து பிரமுகர்கள் வெளியே செல்வதை தவிர வேறு எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் அதிமுகவிலோ புதிது புதிதாக சர்ச்சைகள் கிளம்பி வருகின்றன. குறிப்பாக அதிமுக அமைச்சர்களுக்கிடையே ஒற்றுமை இல்லாமல் இரு பிரிவாக இருப்பதாக கூறப்படுகிறது.

2021ல் அதிமுகவை ஆட்சிக் கட்டிலில் அமர வைப்பதே இலக்கு: துணை முதல்வர் ஓபிஎஸ் பேச்சு!

இந்த நிலையில் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், 2021 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுகவை ஆட்சிக் கட்டிலில் அமர வைக்க வேண்டும் என்பதே இலக்காக இருக்க வேண்டும் என்றும் அதற்காக களப்பணி ஆற்ற வேண்டும் என்றும் நடந்தவை நடந்தவையாகவே இருக்கட்டும், இனி நடப்பவை நல்லவையாக அமையும் என்றும் எண்ணம் தூய்மையாக இருக்க வேண்டும், எடுத்து வைக்கும் அடியும் தூய்மையாக இருக்க வேண்டும் என்றும் கூறினார்.

மேலும், தொண்டர்கள், நிர்வாகிகள் எல்லாரும் கட்சிக்கு நேர்மையாக நடக்க வேண்டும் என மட்டுமே தான் எண்ணியதாகவும் எனக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என நான் எண்ணியதில்லை என்றும் தெரிவித்தார்.