பேரவையில் துணை பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் ஓபிஎஸ்

 

பேரவையில் துணை பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் ஓபிஎஸ்

தமிழக சட்டப்பேரவையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று துணை பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

சென்னை கலைவாணர் அரங்கில் செப்டம்பர் 14 ஆம் தேதி கூடிய தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவுபெறுகிறது. முதல் நாளான கடந்த 14 ஆம் தேதி இரங்கல் தீர்மானம் கொண்டு வரப்பட்ட நிலையில் நேற்று கேள்வி நேரத்துடன் கூட்டத்தொடர் ஆரம்பமாகி நீட் தேர்வு விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழக சட்டப்பேரவையில் நடப்பு நிதியாண்டின் கூடுதல் செலவிற்கான துணை பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்கிறார்.

பேரவையில் துணை பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் ஓபிஎஸ்

பொதுவாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின் அரசுக்கு எதிர்பாராமல் ஏற்படும் செலவுகள் கூட்டத் தொடரில் துணை பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்படும். அந்த வகையில் கொரோனா பாதிப்பால் அரசுக்கு ஏற்பட்டுள்ள கூடுதல் செலவிவுகள் மற்றும் கொரோனா தொற்றால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு கூடுதலாக நிதி ஒதுக்க பேரவைக் கூட்டத்தில் ஒப்புதல் பெறப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.