இந்திய கால்பந்து அணிக்கு கேப்டனான தமிழக பெண் எஸ்ஐ-க்கு ஓபிஎஸ் புகழாரம்!

 

இந்திய கால்பந்து அணிக்கு கேப்டனான தமிழக பெண் எஸ்ஐ-க்கு ஓபிஎஸ் புகழாரம்!

இந்திய மகளிர் கால்பந்து அணி உஸ்பெகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறது. அங்கு சென்று ஏப்ரல் 5ஆம் தேதி உஸ்பெகிஸ்தான் அணியுடனும், ஏப்ரல் 8ஆம் தேதி பெலாரஸுடனும் இந்தியா மோதுகிறது. இது நட்பு ரீதியிலான போட்டி மட்டுமே. இந்த இந்திய அணிக்கு தமிழகத்தைச் சேர்ந்த காவல் அதிகாரி இந்துமதி கதிரேசன் இடம்பெற்றிருக்கிறார். குறிப்பாக அவர் இந்த இரு போட்டிகளுக்கும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கடலூர் மாவட்டத்தில் காவல் துணை ஆய்வாளராகப் பணியாற்றிவருகிறார்.

இந்திய கால்பந்து அணிக்கு கேப்டனான தமிழக பெண் எஸ்ஐ-க்கு ஓபிஎஸ் புகழாரம்!

அணியில் மிட்பீல்டராக இருக்கும் இந்துமதி கதிரேசன், 2014ஆம் ஆண்டிலிருந்து 34 போட்டிகளில் விளையாடி 12 கோல்கள் அடித்திருக்கிறார். தன்னை கேப்டனாக நியமித்திருப்பது மகிழ்ச்சியளிப்பாதாக் கூறியுள்ளார். தற்போது இவருக்கு துணை முதல்வர் ஓபிஎஸ் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்திருக்கிறார்.

அந்த ட்வீட்டில், “இந்திய மகளிர் கால்பந்து அணியின் கேப்டனாக தமிழக காவல்துறையில் பணியாற்றிவரும் கடலூரை சேர்ந்த காவல் துணை ஆய்வாளர் இந்துமதி கதிரேசன் அவர்கள் தேர்வாகியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியும் பெருமிதமும் அளிக்கிறது. தமிழகத்திற்கு பெருமை சேர்த்திடும் அவரது வெற்றிப்பயணம் தொடர எனது நல்வாழ்த்துகள்!” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.