‘புற்றுநோய் துறைக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு’ – மருத்துவர் சாந்தா மறைவுக்கு ஓபிஎஸ் இரங்கல்!

 

‘புற்றுநோய் துறைக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு’ – மருத்துவர் சாந்தா மறைவுக்கு ஓபிஎஸ் இரங்கல்!

பத்ம விபூஷன் உள்ளிட்ட பல விருதுகளை பெற்ற சென்னை – அடையாறு புற்றுநோய் மருத்துவனை தலைவர் சாந்தா இன்று காலமானார். மக்களுக்கு அரும்பணியாற்றிய சாந்தாவின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்திருக்கிறார். சாந்தாவின் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி, பிரதமர் மோடி, மு.க ஸ்டாலின், வைகோ உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அந்த வகையில், மருத்துவர் சாந்தாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து துணை முதல்வர் ஓபிஎஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

‘புற்றுநோய் துறைக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு’ – மருத்துவர் சாந்தா மறைவுக்கு ஓபிஎஸ் இரங்கல்!

அந்த பதிவில், “சென்னை-அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவரும், சிறந்த சமூக சேவகருமான டாக்டர் வி.சாந்தா அவர்கள் இன்று உடல் நலக்குறைவால் காலமான செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.

பத்மஸ்ரீ உள்ளிட்ட பல விருதுகள் வென்றுள்ள இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை மீட்டெடுக்க தன்னலமின்றி அர்ப்பணிப்போடு பணியாற்றியதால் மாண்புமிகு அம்மா அவர்கள் உட்பட அனைவரது பாராட்டுக்களையும் பெற்றவர்.அவரது மறைவு புற்றுநோய் துறைக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.

65 ஆண்டுகளுக்கு மேலாக தனது ஓய்வற்ற சமூக சேவையால் அனைத்து தரப்பு மக்களின் அன்பை பெற்ற டாக்டர் வி.சாந்தா அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.