நாளை செயற்குழு கூட்டம் நடைபெறவுள்ள நிலையில் இரவில் திடீரென மதுசூதனனை சந்தித்த ஓபிஎஸ்! ஏன்?

 

நாளை செயற்குழு கூட்டம் நடைபெறவுள்ள நிலையில் இரவில் திடீரென மதுசூதனனை சந்தித்த ஓபிஎஸ்! ஏன்?

அதிமுகவின் பொதுக் குழுக் கூட்டம் வரும் நாளை காலை 9.45 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஸ்ரீ தலைமை கழகத்தில் கழக அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெறவுள்ளது. இதில் கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொள்ளவுள்ளனர். தனிநபர் இடைவெளியை கடைப்பிடிக்கும் விதமாக அலுவலகத்தில் 3 பகுதிகளில் இருக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தமிழக அரசியல் நிலவரம், சட்டமன்ற தேர்தல், கட்சி வளர்ச்சிப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளன.

நாளை செயற்குழு கூட்டம் நடைபெறவுள்ள நிலையில் இரவில் திடீரென மதுசூதனனை சந்தித்த ஓபிஎஸ்! ஏன்?

இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு சென்னை, வண்ணாரப்பேட்டையில் உள்ள அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த ஆலோசனையின்போது செம்மலையும் உடன் இருந்தார். மதுசூதனன் தலைமையில்தான் நாளை கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த சூழலில் இந்த திடீர் சந்திப்பு பல்வேறு பரபரப்புகளை ஏற்படுத்தியது. மதுசூதனன் கடந்த மாதம் வீட்டில் இருந்தபோது தவறி கீழே விழுந்து தோள்பட்டையில் காயம் ஏற்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். அதுமட்டுமின்றி வயது மூப்பு காரணமாகவும் மதுசூதனன் கடந்த சில மாதங்களாகவே கட்சி பணிகளில் ஈடுபடவில்லை. மதுசூதனனிடம் உடல்நலம் குறித்து விசாரிக்கவே ஓபிஎஸ் அவரது வீட்டிற்கு சென்றதாக அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.