விரக்தியா? திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க சென்றார் ஓபிஎஸ்!

 

விரக்தியா? திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க சென்றார் ஓபிஎஸ்!

தமிழகத்தில் ஆளும் கட்சியான அதிமுகவில் நீடித்து வந்த முதல்வர் வேட்பாளர் சர்ச்சை முடிவுக்கு வந்திருக்கிறது. நான் தான் போட்டியிடுவேன் என ஈபிஎஸ் உடன் சண்டையிட்ட, ஓபிஎஸ்ஸே அடுத்த முதல்வர் வேட்பாளர் பழனிசாமி தான் என அறிவித்து விட்டார். அதே போல, ஓபிஎஸ் முன்வைத்த கோரிக்கையான 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு அமைக்கப்படுவது நிறைவேற்றப்பட்டது. அதிமுகவை இரண்டாக பிளக்கும் அளவுக்கு பூதாகரமாக உருவெடுத்த இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருப்பதால் அதிமுக தொண்டர்கள் உற்சாக மடைந்துள்ளனர். அதே நேரம் அனைத்து அமைச்சர்களும் ஈபிஎஸ்- ஐ முதல்வர் வேட்பாளராக அறிவித்ததற்கு ஓபிஎஸ்க்கு நன்றி தெரிவித்துவருகின்றனர்.

விரக்தியா? திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க சென்றார் ஓபிஎஸ்!

இந்நிலையில் துணை முதலமைச்சரும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் திருப்பதிக்கு சென்றுள்ளார். அங்கு ஏழுமலையானை தரிசிக்கவே பயணம் மேற்கொண்டுள்ளார். தமிழக மக்கள் மற்றும் அதிமுக தொண்டர்களின் நலனைக் கருத்தில் கொண்டே எனது முடிவுகள் இதுவரை இருந்ததாகவும் இனியும் அவ்வாறே இருப்பதாகவும் துணை முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்திருந்தாலும், அவர் கட்டாயப்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும், அதனால் விரக்தியில் இருக்கிறார் என்றும் அரசியல் நிபுணர்கள் கருத்து கூறுகின்றனர்.