முதல்வர் வேட்பாளராகிடனும்! கோவிலில் வழிபாடு நடத்திய ஓபிஎஸ்

 

முதல்வர் வேட்பாளராகிடனும்! கோவிலில் வழிபாடு நடத்திய ஓபிஎஸ்

முதல்வர் வேட்பாளர் யார்? என்று அதிமுகவில் இபிஎஸ் – ஓபிஎஸ் என இரு தரப்பினரும் மல்லுக்கட்டி வரும் பரபரப்பான சூழலில் இன்று அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. ஐந்து மணி நேரத்திற்கு மேலாக நடந்த அதிமுக செயற்குழு கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த கட்சியின் மூத்த தலைவர் கே.பி.முனுசாமி, வரும் அக்டோபர் 7ம் தேதி அன்று அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அக்டோபர் மாதம் 7ஆம் தேதி அறிவிக்கப்படும். அன்றைய தினம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்சும், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ்சும் இணைந்து அறிவிப்பார்கள் என்று தெரிவித்தார்.

முதல்வர் வேட்பாளராகிடனும்! கோவிலில் வழிபாடு நடத்திய ஓபிஎஸ்

இந்நிலையில் முதல்வர் வேட்பாளர் கனவு பலித்திடவேண்டும் என துணை முதல்வர் ஓபிஎஸ் சிறுவாபுரியில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தினார். மேள தாளம் முழங்க பூரண கும்ப மரியாதையுடன் துணை முதல்வர் ஓபிஎஸ்க்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.