டெல்லியில் அரசு வாகனத்தை புறக்கணித்த ஓபிஎஸ்

 

டெல்லியில் அரசு வாகனத்தை புறக்கணித்த ஓபிஎஸ்

நாளை காலை 11 மணிக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பன்னீர் செல்வமும் பிரதமர் மோடியை சந்திக்கவிருக்கின்றனர். இதற்காக ஓபிஎஸ் இன்று காலை டெல்லி வந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி, இன்று இரவுக்கு டெல்லிக்கு புறப்படவுள்ளார்.

டெல்லியில் அரசு வாகனத்தை புறக்கணித்த ஓபிஎஸ்

பிரதமர் அலுவலகத்திலிருந்து வந்த அழைப்பின்பேரில் இச்சந்திப்பு நடைபெறவுள்ளது. பிரதமருடனான சந்திப்புக்கு பின் ஓபிஎஸ், அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. உட்கட்சி விவகாரம், மத்திய அமைச்சரவையில் அதிமுகவுக்கு இடமளிக்காதது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் டெல்லி வந்து இறங்கிய ஓ பன்னீர்செல்வம் அரசு வாகனம் இருந்தும் தனியார் வாகனத்தில் அரசு இல்லத்திற்கு சென்றார். சென்னையில் இருந்து வந்துள்ள தந்தையும், டெல்லியில் உள்ள ரவீந்தரநாத், விமான நிலையத்தில் இருந்து அரசு இல்லம் வரை சில விஷயங்கள் குறித்து ரகசியமாக ஆலோசித்து உள்ளனர். அதனால் தனியார் வாகனத்தில் பயணித்ததாக கூறப்படுகிறது. ஓ.பி.எஸ்- ஐ அழைக்க அனுப்பிக்கப்பட்ட அரசு வாகனம் காலியாக சென்றது.