ஓபிஎஸ் – ஈபிஎஸ் ஒரே காரில் நெல்லை பயணம்!

 

ஓபிஎஸ் – ஈபிஎஸ் ஒரே காரில் நெல்லை பயணம்!

முதல்வர் பழனிசாமியும் துணை முதல்வர் ஓபிஎஸ்ஸும் ஒரே காரில் நெல்லை பயணிக்கின்றனர்.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் ஒரு சில மாதங்களே எஞ்சியுள்ளன. எப்படியாவது ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று அதிமுகவும், 2 முறை தவறவிட்ட ஆட்சியை இந்த முறை பிடித்தே ஆக வேண்டும் என்று திமுகவும் அதிரடியாக களமிறங்கியுள்ளன. மாவட்ட வாரியாக சென்று முதல்வர் பழனிசாமி, அதிமுக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி வாக்கு சேகரித்து வருகிறார்.

ஓபிஎஸ் – ஈபிஎஸ் ஒரே காரில் நெல்லை பயணம்!

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில், அடுத்த முதல்வர் வேட்பாளர் யார்? என்று அதிமுகவில் ஒரு பூகம்பமே வெடித்தது. பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு, முதல்வர் பழனிசாமியே சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் வேட்பாளராக போட்டியிடுவார் என்று ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். வேறு வழியில்லாமல் ஓபிஎஸ் அதனை ஏற்றுக் கொண்டார். இந்த சர்ச்சைக்கு பிறகு, கட்சிக்குள் உட்பூசல் ஏதுமின்றி ஓபிஎஸ்ஸும் ஈபிஎஸ்ஸும் திறம்பட கட்சியை வழி நடத்திச் செல்கின்றனர்.

ஓபிஎஸ் – ஈபிஎஸ் ஒரே காரில் நெல்லை பயணம்!

இந்த நிலையில், நெல்லை மாவட்டம் கோவிந்தப்பேரியில் பி.எச்.பாண்டியன் மணிமண்டப திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக துணை முதல்வர் பன்னீர் செல்வமும் முதல்வர் பழனிசாமியும் தூத்துக்குடியில் இருந்து ஒரே காரில் செல்கின்றனர். வழக்கமாக எந்த நிகழ்வாக இருந்தாலும் தனித்தனி காரில் செல்லும் அவர்கள், இன்று ஒரே காரில் செல்வது அரசியல் ரீதியாக உற்று நோக்கப்படுகிறது.