திமுக எம்.எல்.ஏவை பாராட்டுறீங்களோ… அதிமுக பிரமுகரை தூக்கியடித்த ஓபிஎஸ் – ஈபிஎஸ்!

 

திமுக எம்.எல்.ஏவை பாராட்டுறீங்களோ… அதிமுக பிரமுகரை தூக்கியடித்த ஓபிஎஸ் – ஈபிஎஸ்!

மண்ணச்சநல்லூர் திமுக எம்.எல்.ஏவை நேரில் சென்று பாராட்டி போஸ்டர் ஒட்டிய அதிமுக பிரமுகர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் கதிரவன். எம்எல்ஏவாக பொறுப்பேற்றதும் தனது தொகுதி மக்களுக்காக பல்வேறு உதவிகளை கதிரவன் செய்து வருகிறார். கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு மளிகை பொருட்கள், காய்கறிகள் வழங்குவது மக்களின் குறைகளை கேட்டறிந்து தீர்த்து வைப்பது மக்களின் தேவையறிந்து சொந்த செலவில் உதவி செய்வது என அப்பகுதி மக்களின் உள்ளத்தை கவர்ந்துள்ளார்.

திமுக எம்.எல்.ஏவை பாராட்டுறீங்களோ… அதிமுக பிரமுகரை தூக்கியடித்த ஓபிஎஸ் – ஈபிஎஸ்!

தனது தொகுதி மக்களுக்கு கதிரவன் செய்துவரும் உதவிகளால் ஈர்க்கப்பட்ட அதிமுக திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் முருகானந்தம் எம்.எல்.ஏ கதிரவனை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார். சொந்த செலவில் மக்களுக்கு நல்லது செய்பவரை பாராட்டுவதில் எந்த தவறும் இல்லை என்றும் இது பற்றி கட்சி தலைமைக்கு உரிய விளக்கம் அளித்துள்ளேன் என்றும் அதிரடியாக பேசியிருந்தார். அதுமட்டுமல்லாமல் மணச்சநல்லூர் பகுதியில் திமுக எம்எல்ஏ கதிரவனை பாராட்டி போஸ்டர்களையும் ஒட்டியிருந்தார்.

திமுக எம்.எல்.ஏவை பாராட்டுறீங்களோ… அதிமுக பிரமுகரை தூக்கியடித்த ஓபிஎஸ் – ஈபிஎஸ்!

திமுகவுக்கு ஆதரவாக முருகானந்தம் செயல்பட்டது அதிமுக தலைமையை அதிருப்தி அடையச் செய்த நிலையில், அவரை கட்சியில் இருந்து நீக்கி ஓபிஎஸ் – ஈபிஎஸ் உத்தரவிட்டுள்ளனர். கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் முருகானந்தம் நீக்கப்படுவதாகவும் அதிமுகவினர் யாரும் அவருடன் தொடர்பு வைத்துக் கொள்ள கூடாது என்றும் தெரிவித்துள்ளனர்.