நேற்று இரவு வரை காத்திருப்பு…இன்று அமித்ஷாவுடன் ஓபிஎஸ் – ஈபிஎஸ் சந்திப்பு!

 

நேற்று இரவு வரை காத்திருப்பு…இன்று அமித்ஷாவுடன் ஓபிஎஸ் – ஈபிஎஸ் சந்திப்பு!

மத்திய உள்துறை அமைச்சரை அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி இருவரும் சந்தித்து பேசி வருகின்றனர்.

நேற்று இரவு வரை காத்திருப்பு…இன்று அமித்ஷாவுடன் ஓபிஎஸ் – ஈபிஎஸ் சந்திப்பு!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் நேற்று பிரதமர் மோடியை டெல்லியில் சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்பின் போது முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி மற்றும் மனோஜ் பாண்டியன் ஆகியோர் உடனிருந்தனர். இதில் உள்ளாட்சித் தேர்தல் , சசிகலா குறித்து பேசியதாக தெரிகிறது. அத்துடன் தமிழகத்தில் கூட்டணிக்காக பிரச்சாரம் செய்ததற்கு நன்றி தெரிவித்ததுடன், மேகதாது அணை கட்டக்கூடாது என்று பிரதமரிடம் வலியுறுத்தியதாக எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

நேற்று இரவு வரை காத்திருப்பு…இன்று அமித்ஷாவுடன் ஓபிஎஸ் – ஈபிஎஸ் சந்திப்பு!

இந்நிலையில் டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் ஓபிஎஸ் – ஈபிஎஸ் இருவரும் சந்தித்துள்ளனர். ஏற்கனவே பிரதமர் மோடியை சந்தித்து பேசிய நிலையில் அமித் ஷாவை சந்தித்து ஓபிஎஸ் – ஈபிஎஸ் ஆலோசனை நடத்தி வருகின்றனர். சசிகலா விவகாரம், உள்ளாட்சி தேர்தல் முடிவு குறித்து அமித்ஷாவுடன் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.அமித் ஷாவை சந்திக்க ஓபிஎஸ் – ஈபிஎஸ் நேற்று இரவு வரை காத்திருந்த நிலையில் தாமதமாக இன்று சந்திப்பு நடந்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சருடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் சந்திப்பு நடத்தி உள்ளனர். நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறும் இந்த சந்திப்பு தமிழக அரசியல் குறித்து ஓபிஎஸ் – ஈபிஎஸ் பேசி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.