அமித்ஷாவுடன் ஈபிஎஸ், ஓபிஎஸ் சந்திப்பு! டெல்லியில் நடந்தது என்ன?

 

அமித்ஷாவுடன் ஈபிஎஸ், ஓபிஎஸ் சந்திப்பு! டெல்லியில் நடந்தது என்ன?

2 நாள் பயணமாக டெல்லி சென்ற அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே பழனிசாமி, முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி ஆகியோர் நேற்று காலை பிரதமர் மோடியை சந்தித்து பேசினர். இந்நிலையில், இன்று காலை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினர். அவர்களுடன் அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் எஸ்.பி.வேலுமணி, மனோஜ்பாண்டியன், ஆகியோரும் உடன் சென்றனர்.

அமித்ஷாவுடன் ஈபிஎஸ், ஓபிஎஸ் சந்திப்பு! டெல்லியில் நடந்தது என்ன?

சட்டமன்ற தேர்தலுக்கு பின் மோடியை சந்தித்த ஓபிஎஸ், ஈபிஎஸ், லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை, உள்ளாட்சித் தேர்தல், அரசியல் சூழல், சசிகலா விவகாரம் உள்ளிட்டவை குறித்து பிரதமர் மோடியிடம் பேசியதாக தெர்கிறது. உள்ளாட்சி தேர்தலில் 25 சதவீத தேர்தலில் போட்டியிட பாஜக திட்டமிட்டுள்ளது. திமுக ஆளுங்கட்சியாக உள்ளதால், அதனை எதிர்கொள்ளும் வகையில் வலுவான அணியை அமைக்க பா.ஜ.க முயற்சிக்கிறது.

அமித்ஷாவுடன் ஈபிஎஸ், ஓபிஎஸ் சந்திப்பு! டெல்லியில் நடந்தது என்ன?
et

அதற்காக, அதிமுக அணிகள் இணைய வேண்டும் என்ற கோரிக்கையை பாஜக முன்வைத்துவருகிறது. இதுகுறித்தே அமித்ஷாவுடனான் சந்திப்பில் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சசிகலாவை அதிமுகவுடன் இணைத்துக்கொள்ள ஓபிஎஸ் சம்மதம் தெரிவித்தாலும், ஈபிஎஸ் அதற்கு சம்மதம் தெரிவிக்க மறுப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.