திடீர் ரெய்டு; மு.க.ஸ்டாலின் அரசுக்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் கண்டனம்!

 

திடீர் ரெய்டு; மு.க.ஸ்டாலின் அரசுக்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் கண்டனம்!

திமுக தலைமையிலான அரசு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடத்த ஏவிவிட்டிருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ள ஓபிஎஸ், ஈபிஎஸ் ஸ்டாலின் அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தலின் போது பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து அதன் மூலம் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்திருக்கின்ற ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தமிழ்நாட்டு மக்களுக்கு தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் பணியில் கவனம் செலுத்தாமலும் தமிழக வளர்ச்சி திட்ட பணிகளில் கவனம் செலுத்தாமலும் எதிர்க்கட்சியினர் மீது பழிவாங்கும் நடவடிக்கைகளில் மட்டுமே மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு பொதுமக்கள் மத்தியில் களங்கம் ஏற்படுத்தும் வகையில் காவல்துறையை முடக்கி விட்டு இருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது.

திடீர் ரெய்டு; மு.க.ஸ்டாலின் அரசுக்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் கண்டனம்!

ஸ்டாலின் தலைமையிலான திமுக அமைச்சர்கள் பலர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில் பல்வேறு குற்றச்சாட்டுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு தற்போது பிணையில் இருந்து நீதிமன்றத்தில் வழக்கை எதிர் நோக்கியிருக்கும் திமுக அமைச்சர்கள், அதனைப் திசை திருப்புவதற்காக வேண்டும் என்று அரசியல் காழ்ப்புணர்ச்சியால் பொய்யான குற்றச்சாட்டுகளை புனையும் நடவடிக்கையில் திமுக அரசு ஈடுபட்டு இருப்பது கண்டனத்திற்குரியது.

தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகள் என்ன ஆயிற்று என்றும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்ற திறானி இல்லாமலும் ஆட்சி பொறுப்பேற்று மக்களுடைய எதிர்பார்ப்புகள் நிறைவேற்றாமல் குறுகிய காலத்திலேயே மக்களுடைய அதிருப்தியை பெற்றிருக்கிற திமுக அரசு மக்களின் கவனத்தை திசை திருப்பி வருகிறது. அதிமுகவை அழித்துவிடலாம் ஒழித்து விடலாம் என கனவு கண்டால் அது பகல் கனவாகவே முடியும் என்று வரலாறு திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு தெரியும். அதிமுக இது போன்ற அடக்குமுறைகளை எல்லாம் தாங்கி வலுப்பெற்று இயக்கம் என்பதை திமுக தலைவர் ஸ்டாலின் போன்றவர் அறிவர்.

எனவே காழ்ப்புணர்ச்சியோடு காவல்துறை மூலம் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது காவல்துறையை ஏவிவிட்டு அவரது இல்லத்தில் சோதனை என்ற பெயரில் அச்சுறுத்த நினைக்கும் திமுக அரசுக்கு எங்களுடைய கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கழகம் உறுதுணையாக இருக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்வதோடு ஸ்டாலின் அரசினுடைய இந்த அராஜகத்தையும் அவர்களின் துணையோடு சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் எதிர்கொள்வோம் என்று குறிப்பிட்டுள்ளனர்.