“சீட்டு இல்ல; உள்ளாட்சி தேர்தலில் கவனிக்கலாம்” ஓபிஎஸ் – ஈபிஎஸ் வகுக்கும் திட்டம்!

“சீட்டு இல்ல; உள்ளாட்சி தேர்தலில் கவனிக்கலாம்”   ஓபிஎஸ் – ஈபிஎஸ் வகுக்கும் திட்டம்!

அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் இன்று ஓபிஎஸ் – ஈபிஎஸ் ஆலோசனை நடத்துகின்றனர்.

“சீட்டு இல்ல; உள்ளாட்சி தேர்தலில் கவனிக்கலாம்”   ஓபிஎஸ் – ஈபிஎஸ் வகுக்கும் திட்டம்!

சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் நடைபெறவுள்ள நிலையில் அதிமுக பிப் 24 ஆம் தேதி முதல் விருப்ப மனுக்களை விநியோகம் செய்தது. இதையடுத்து விருப்ப மனு தாக்கல் கடந்த 3 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. மொத்தமாக 8,240 பேர் விருப்ப மனுக்கள் பெறப்பட்ட நிலையில் நேற்று ஒரே நாளில் அனைவருக்கும் நேர்காணல் நடத்தப்பட்டதாக அதிமுக தலைமை கழகம் கூறியுள்ளது

“சீட்டு இல்ல; உள்ளாட்சி தேர்தலில் கவனிக்கலாம்”   ஓபிஎஸ் – ஈபிஎஸ் வகுக்கும் திட்டம்!

இந்நிலையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் உடன் இன்று ஓபிஎஸ் இபிஎஸ் ஆலோசனை நடத்துகின்றனர். நேற்று நேர்காணல் முடிந்த நிலையில் இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடக்கிறது. மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தி அதிமுக வேட்பாளர்களின் ஓபிஎஸ் – ஈபிஎஸ் இறுதி செய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பேரவைத் தேர்தலில் சீட்டு கிடைக்காதவர்களுக்கு உள்ளாட்சி தேர்தலில் வாய்ப்பு தருவது பற்றி ஆலோசிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.