முதல்வர் பழனிசாமிக்கு ஓபிஎஸ் தீபாவளி வாழ்த்து!

 

முதல்வர் பழனிசாமிக்கு ஓபிஎஸ் தீபாவளி வாழ்த்து!

தீபாவளி பண்டிகையையொட்டி, முதல்வர் பழனிசாமிக்கு துணை முதல்வர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் நாளை மறுநாள் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. கொரோனாவால் மக்கள் பல மாதமாக முற்றிலுமாக முடங்கிக் கிடக்கும் நிலையில், இந்த தீபாவளி பண்டிகை மக்கள் வாழ்வில் புதுப்பொலிவேற்றும் என நம்பப்படுகிறது. கொரோனாவில் இருந்து விடுபட்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப எண்ணும் மக்கள், ஆரவாரமாக பண்டிகைக்கு ஷாப்பிங் செய்து வருகின்றனர். மேலும், வெளியூர்களில் தங்கி பணிபுரியும் மக்கள் எல்லாரும் சொந்த ஊர்களுக்கு படையெடுக்க தொடங்கிவிட்டனர்.

முதல்வர் பழனிசாமிக்கு ஓபிஎஸ் தீபாவளி வாழ்த்து!

இந்த நிலையில், முதல்வர் பழனிசாமிக்கு நேரில் சென்று தீபாவளி வாழ்த்துக்கள் தெரிவித்ததாக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “வருகின்ற தீபாவளித் திருநாள் பண்டிகையை முன்னிட்டு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி முதல்வர் பழனிசாமியை இன்று நேரில் சந்தித்து எனது உளம்கனிந்த தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்து, மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டேன்” என குறிப்பிட்டுள்ளார்.