முதல்வரின் ஆலோசனையில் பங்கேற்காத ஓபிஎஸ்; ஆதரவாளர்களுடன் பேச்சுவார்த்தை!

 

முதல்வரின் ஆலோசனையில் பங்கேற்காத ஓபிஎஸ்; ஆதரவாளர்களுடன் பேச்சுவார்த்தை!

தலைமை செயலகத்தில் நடைபெற்று வரும் ஆலோசனை கூட்டத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ் பங்கேற்கவில்லை.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் பற்றிய பேச்சு எழுந்தவுடனே அதிமுகவின் முதல்வர் வேட்பளார் யார் என்ற சர்ச்சை எழுந்தது. இதற்கு ஒரு முற்றிப்புள்ளி வைப்பதற்காக, நேற்று சென்னை ராயப்பேட்டையில் இருக்கும் அதிமுக தலைமை கழகத்தில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் அதிமுகவின் முக்கிய பிரமுகர்கள் எல்லாரும் இருந்த நிலையிலும், முதல்வர் வேட்பாளர் பிரச்னைக்கு தீர்வு எட்டப்படவில்லை.

முதல்வரின் ஆலோசனையில் பங்கேற்காத ஓபிஎஸ்; ஆதரவாளர்களுடன் பேச்சுவார்த்தை!

அதுமட்டுமில்லாமல், முதல்வர் வேட்பாளர் தொடர்பாக துணை முதல்வர் ஓபிஎஸ்க்கும் முதல்வர் பழனிசாமிக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியானது. இந்த சர்ச்சை தொடர்ந்து நீடித்ததால் வரும் 7ம் தேதி முதல்வர் வேட்பாளர் யார் என முதல்வர் பழனிசாமியும் துணை முதல்வர் ஓபிஎஸ்சும் இணைந்து அறிவிப்பார்கள் என கே.பி முனுசாமி அறிவித்தார். இது பெரும் எதிர்பார்ப்பையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

முதல்வரின் ஆலோசனையில் பங்கேற்காத ஓபிஎஸ்; ஆதரவாளர்களுடன் பேச்சுவார்த்தை!

இந்த நிலையில், ஆட்சியர்களுடன் முதல்வர் தற்போது நடத்தி வரும் ஆலோசனையில் துணை முதல்வர் ஓபிஎஸ் பங்கேற்கவில்லை. வழக்கமாக முதல்வர் நடத்தும் எல்லா ஆலோசனையிலும் பங்கேற்கும் ஓபிஎஸ், நேற்று ஏற்பட்ட வாக்குவாதத்தின் காரணமாக இன்று கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. மாறாக, துணை முதல்வர் ஓபிஎஸ் தனது வீட்டில் கே.பி முனுசாமி, வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியனுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.