‘திமுகவின் பொய்யுரைகளை ஒருபோதும் மக்கள் நம்பமாட்டார்கள்’ – துணை முதல்வர் ஓபிஎஸ் ட்வீட்!

 

‘திமுகவின் பொய்யுரைகளை ஒருபோதும் மக்கள் நம்பமாட்டார்கள்’ – துணை முதல்வர் ஓபிஎஸ் ட்வீட்!

மீத்தேன் திட்டத்துக்கு திமுக அனுமதி அளித்த நிலையில், அம்மா ஆட்சி தான் அதற்கு தடை விதித்து விவசாயிகளை காத்ததாக துணை முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஓபிஎஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “விவசாயிகள் மீது அக்கறை உள்ளதுபோல் இப்போது கபடநாடகம் ஆடும் திமுக தான் 04.01.2011 அன்று மீத்தேன் திட்டத்திற்கு அனுமதியளித்து தமிழக விவசாயிகளுக்கு கடுமையான துரோகம் இழைத்தது. ஆனால் அத்திட்டத்திற்கு 17.7.2013 அன்று தடைவிதித்து விவசாயிகளின் நலன் காத்தவர் மாண்புமிகு அம்மா அவர்கள் தான்.

‘திமுகவின் பொய்யுரைகளை ஒருபோதும் மக்கள் நம்பமாட்டார்கள்’ – துணை முதல்வர் ஓபிஎஸ் ட்வீட்!

விவசாயிகளின் நலன் காக்க காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுக்காக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து, 20.02.2020 அன்று பேரவையில் சட்டம் இயற்றியது மாண்புமிகு அம்மாவின் அரசு. இதனை தமிழக மக்கள் நன்கு அறிவர். விவசாயிகளின் பாதுகாவலன் அம்மா அவர்களின் அரசு மட்டுமே. எனவே திமுகவின் பொய்யுரைகளை ஒருபோதும் தமிழக மக்கள் நம்பமாட்டார்கள்.”என பதிவிட்டுள்ளார்.

டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நாளுக்கு நாள் வலுப்பெற்று வரும் சூழலில், அதிமுக அரசு மத்திய அரசின் வேளாண் திட்டங்களுக்கு ஆதரவு அளிக்கிறது. அதனை விமர்சித்த திமுக தலைவர் மு.க ஸ்டாலின், விவசாயிகளின் முதுகெலும்பை உடைக்கும் சட்டத்திற்கு அதிமுக அரசு வாக்களித்ததாகவும். விவசாயிகளுக்கு துரோகம் செய்து விட்டதாகவும் அறிக்கை வெளியிட்டிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஓபிஎஸ் இந்த பதிவை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.