முதல்வரே… மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுங்கள் – ஓபிஎஸ் வலியுறுத்தல்!

 

முதல்வரே… மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுங்கள் – ஓபிஎஸ் வலியுறுத்தல்!

இலங்கை கடற்படையினரின் தொல்லை இல்லாமல் மீனவர்கள் மீன்பிடிக்க வழிவகை செய்யுமாறு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் பல இன்னல்களை சந்திக்கிறார்கள். மீன் உற்பத்தியை பெருக்குவது மட்டுமல்லாமல் அவர்களது பாதுகாப்பினை உறுதி செய்வது அரசின் கடமை. மீன்பிடி தடைக்காலம் முடிந்து மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றதிலிருந்து இலங்கை கடற்படையினரால் தாக்கப்படும் சம்பவங்கள், அவர்களுடைய வலைகளை அறுத்து கடலில் வீசி எறியப்படும் சம்பவங்கள் தொடர்ச்சியாக அரங்கேறுவதாக தகவல்கள் வருகின்றன.

முதல்வரே… மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுங்கள் – ஓபிஎஸ் வலியுறுத்தல்!

கடந்த 17ஆம் தேதி 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சென்ற 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படையினர் விரட்டி அடிக்கப்பட்டதாகவும் அவர்கள் விரித்திருந்த வலைகளை கடலில் தூக்கி போட்டதாகவும் மீனவ மக்கள் தெரிவிக்கின்றனர். இலங்கை கடற்படையினரின் இதுபோன்ற செயல் மீனவ மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் அவர்களின் வருமானத்தையும் குறைக்கிறது. மீனவ மக்கள் இலங்கை கடற்படையினரின் தொல்லை இல்லாமல் மீன்பிடித் தொழிலை மேற்கொள்ள தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. எனவே, இதில் தமிழக முதல்வர் உரிய கவனம் செலுத்தி மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு பாதுகாப்புக்கும் உத்தரவாதம் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.