ஆளுநர் பதவியேற்பு விழாவில் பங்கேற்காததற்கு வருத்தம் தெரிவித்த ஓபிஎஸ்

 

ஆளுநர் பதவியேற்பு விழாவில் பங்கேற்காததற்கு வருத்தம் தெரிவித்த ஓபிஎஸ்

தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார் . இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

ஆளுநர் பதவியேற்பு விழாவில் பங்கேற்காததற்கு வருத்தம் தெரிவித்த ஓபிஎஸ்

கொரோனா காலகட்டம் என்பதால் 500 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டது. பதவியேற்பு நிகழ்ச்சி நடந்து முடிந்தவுடன் தேநீர் விருந்து நடந்தது.பதவியேற்புக்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த ஆளுநர் ஆர்.என்.ரவி , தமிழ் நாட்டின் முன்னேற்றத்திற்காக உழைப்பேன் . பாரம்பரியமான தமிழ்நாட்டில் ஆளுநராக பொறுப்பேற்றிருக்கும் பெருமைப்படுகிறேன் என்றார்.

ஆளுநர் பதவியேற்பு விழாவில் பங்கேற்காததற்கு வருத்தம் தெரிவித்த ஓபிஎஸ்

இந்நிலையில் ஆளுநர் பதவியேற்பு விழாவில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் பங்கேற்கவில்லை. இந்த சூழலில் தமிழகத்தின் புதிய ஆளுநராக பொறுப்பேற்றுள்ள ஆர்.என்.ரவிக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். அத்துடன் ஆளுநர் பதவியேற்பு விழாவில் பங்கேற்காததற்கு வருத்தம் தெரிவித்து ஓபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார்.

அதில் “தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக பதவி ஏற்றுள்ள ஆர்.என்.ரவிக்கு வாழ்த்துக்கள். உங்களது பதவிக்காலத்தில் தமிழ்நாடு மேன்மேலும் வளர்ச்சி அடையும் என்ற நம்பிக்கை உள்ளது. ஆளுநர் பதவியேற்பு விழாவில் பங்கேற்காததற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். எனது சொந்த ஊரான தேனி மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களாக உள்ளேன். எனது மனைவி விஜயலட்சுமி மறைவை அடுத்து இறுதிக் சடங்கிற்காக நான் தற்போது சென்னையில் தங்கி உள்ளேன். இன்னும் ஓரிரு நாட்களில் நான் சென்னை வருவேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.