ஓபிஎஸ்- ஈபிஎஸ் தனித்தனியே தீவிர ஆலோசனை!

 

ஓபிஎஸ்- ஈபிஎஸ் தனித்தனியே தீவிர ஆலோசனை!

முதல்வர் வேட்பாளர் சர்ச்சை தொடர்பாக முதல்வர் பழனிசாமியும் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வமும் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலை நோக்கி, கட்சி அனைத்தும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இத்தகைய பரபரப்பான சூழலில் தான், அதிமுகவில் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார்? என்ற சர்ச்சை எழுந்துள்ளது. ஜெயலலிதா இருந்த போது முதல்வரான ஓபிஎஸ், நான் தான் போட்டியிடுவேன் என்றும் சசிகலாவால் முதல்வராக்கப்பட்ட ஈபிஎஸ், நான் தான் போட்டியிடுவேன் என்றும் மல்லுக்கட்டி வருகின்றனர்.

ஓபிஎஸ்- ஈபிஎஸ் தனித்தனியே தீவிர ஆலோசனை!

இந்த பிரச்னைக்கு அதிமுக தலைமையால் கூட முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லை. அதனால் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ்சும் இணைந்து பேசி சுமுகமான முடிவை எடுத்து, முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அவர்களே அறிவிப்பார்கள் என கே.பி முனுசாமி அறிவித்துள்ளார். இந்த முடிவை எதிர்பார்த்து அதிமுக தொண்டர்கள் ஆவலோடு காத்துக் கிடக்கின்றனர்.

இந்த நிலையில் முதல்வர் பழனிசாமியும் துணை முதல்வர் ஓபிஎஸ்சும் தனித்தனியே தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். அமைச்சர்கள் உதயகுமார், கடம்பூர் ராஜு உள்ளிட்டோருடன் முதல்வரும் கே.பி முனுசாமி, மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோருடன் ஓபிஎஸ்சும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். பெரும்பாலும் முதல்வர் வேட்பாளர் பதவிக்கு ஈபிஎஸ் தான் தேர்ந்தெடுக்கப்படுவார் என்பதே பலரின் கருத்தாக இருக்கிறது.