இரண்டாம் கட்ட நேர்காணல் : வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் ஓபிஎஸ் – ஈபிஎஸ்!

 

இரண்டாம் கட்ட நேர்காணல் : வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் ஓபிஎஸ் – ஈபிஎஸ்!

சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி அதிரடியாக களமிறங்கியிருக்கும் அதிமுக, கடந்த மாதம் 24ம் தேதியிலிருந்து விருப்ப மனுக்களை பெற்றது. கடந்த புதன்கிழமையோடு விருப்ப மனு தாக்கல் நிறைவடைந்த நிலையில் மொத்தமாக 8240 பேர் விருப்ப மனுக்களை அளித்திருப்பதாக அதிமுக அறிவித்தது. இதையடுத்து, விருப்ப மனு அளித்த எல்லாருக்கும் ஒரே நாளில் நேர்காணல் நடத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியானது.

இரண்டாம் கட்ட நேர்காணல் : வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் ஓபிஎஸ் – ஈபிஎஸ்!

திமுக உள்ளிட்ட கட்சிகள் இரண்டு அல்லது மூன்று கட்டங்களாக நேர்காணல் நடத்தி வரும் நிலையில், ஒரே கட்ட நேர்காணல் எப்படி சாத்தியம் என்ற கேள்வி எழுந்தது. எதையும் முடித்துக் காட்டும் கட்சி அதிமுக, என்ற தொனியிலேயே அதிமுகவின் இந்த அறிவிப்பு அமைந்தது. அதன் படியே, இன்று காலை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், துணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ், அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் நேர்காணல் தொடங்கியது. இதில் வைத்திலிங்கம், பா. வளர்மதி, ஜஸ்டின் ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நேர்காணலை நடத்தினர்.

இரண்டாம் கட்ட நேர்காணல் : வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் ஓபிஎஸ் – ஈபிஎஸ்!

முதற்கட்டமாக தேனி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நேர்காணல் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, தஞ்சாவூர், சேலம், கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நடந்தது. முதற்கட்டமாக இன்று மாலை 3 மணி வரையில் 139 தொகுதிகளுக்கான நேர்காணல் நடைபெற்றிருப்பதாக தெரிய வந்தது. இந்த நிலையில், ஓபிஎஸ் – ஈபிஎஸ் தலைமையில் இரண்டாம் கட்ட நேர்காணல் தொடங்கியிருக்கிறது. சென்னை ராயப்பேட்டையில் அதிமுக தலைமையகத்தில் நேர்காணல் நடைபெற்று வருகிறது.