“முதல்வருக்கு எதிராக செயல்படுகிறார் ஓபிஎஸ்” : மு.க.ஸ்டாலின்

 

“முதல்வருக்கு எதிராக செயல்படுகிறார்  ஓபிஎஸ்”  : மு.க.ஸ்டாலின்

முதல்வர் கூடவே இருக்கும் ஓபிஎஸ் அவருக்கு எதிரான செயல்களை செய்து வருகிறார் என்று மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

“முதல்வருக்கு எதிராக செயல்படுகிறார்  ஓபிஎஸ்”  : மு.க.ஸ்டாலின்

தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ள நிலையில் திமுகவில் மு.க. ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி உள்ளிட்ட பலர் தீவிர பரப்புரை செய்து வருகின்றனர்.மு.க. ஸ்டாலின் மக்கள் கிராம சபை என்ற பெயரில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டதை தொடர்ந்து உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற என்ற பரப்புரையை செய்து வருகிறார். அந்த வகையில் நேற்றுமுதல் 22ஆம் தேதி வரை 4ஆம் கட்ட பிரச்சார பயணம் மேற்கொள்கிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். மதுரை, தேனி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் மாவட்டங்களில் ஸ்டாலின் 4 ஆம் கட்ட பிரச்சாரம் செய்கிறார்.

“முதல்வருக்கு எதிராக செயல்படுகிறார்  ஓபிஎஸ்”  : மு.க.ஸ்டாலின்

இந்நிலையில் தேனியில் தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “முதல்வர் கூடவே இருக்கும் ஓபிஎஸ் அவருக்கு எதிரான செயல்களை செய்து வருகிறார். துணை முதல்வர் ஓபிஎஸ் 10 ஆண்டுகளாக தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை. துணை முதல்வர் பன்னீர்செல்வம் மக்களுக்கு என்ன செய்துள்ளார்? மக்களின் தேவைகளை நிறைவேற்றாமல் பக்கம் பக்கமாக விளம்பரம் கொடுக்கிறார். திமுக கூட்டத்தில் பங்கேற்று குறைகளைக் கூறும் மக்களை அழைத்து அதிமுக உதவி செய்கிறது” என்றார்.