‘எதிர்கட்சிகளின் கனவு பலிக்காது’ : துணை முதல்வர் ஓபிஎஸ்

 

‘எதிர்கட்சிகளின் கனவு பலிக்காது’ : துணை முதல்வர் ஓபிஎஸ்

மகிழ்ச்சியுடன் முதல்வர் வேட்பாளரை அறிவித்துள்ளேன் என்று துணை முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

‘எதிர்கட்சிகளின் கனவு பலிக்காது’ : துணை முதல்வர் ஓபிஎஸ்

அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவித்தார் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம். இதையடுத்து செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், ‘அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் குழப்பம் ஏற்படுத்த முயற்சித்தன. அவர்களின் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. மகிழ்ச்சியுடன் முதல்வர் வேட்பாளரை அறிவித்துள்ளேன். எதிர்கட்சிகளின் கனவு பலிக்காது’ என்றார்.

‘எதிர்கட்சிகளின் கனவு பலிக்காது’ : துணை முதல்வர் ஓபிஎஸ்

முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். ஈபிஎஸின் முதல்வர் வேட்பாளர் கோரிக்கை நிறைவேற்றப்பட்ட நிலையில் ஓபிஎஸ் கோரிக்கையான வழிகாட்டுதல் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.