பத்திரப் பதிவு முடிந்ததும் பட்டா மாறும் திட்டத்துக்கு எதிர்ப்பு! – வி.ஏ.ஓ-க்கள் மவுன போராட்டம்

பத்திரப் பதிவு முடிந்ததும் பட்டா மாறும் திட்டத்துக்கு எதிர்ப்பு! – வி.ஏ.ஓ-க்கள் மவுன போராட்டம்

பத்திரப்பதிவு முடிந்ததும் பட்டா பெயர் மாறும் புதிய திட்டத்தால் சிக்கல்கள் எழும் என்றும், தங்கள் அதிகாரம் குறைக்கப்படுவதைக் கண்டித்தும் வருகிற திங்கட்கிழமை மவுன போராட்டம் நடத்தப்படும் என்று கிராம நிர்வாக அலுவலகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பத்திரப் பதிவு முடிந்ததும் பட்டா மாறும் திட்டத்துக்கு எதிர்ப்பு! – வி.ஏ.ஓ-க்கள் மவுன போராட்டம்
தமிழகத்தில் பத்திரப்பதிவு முடிந்தவுடன் பட்டா மாற்றும் புதிய திட்டத்தை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது. இதற்கு பொது மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். கிராம நிர்வாக அலுவலகர்கள் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலகர்கள் சங்க பொதுச் செயலாளர் செல்வன் கூறுகையில், “பல்வேறு சட்டச் சிக்கல்கள் ஏற்படும் என்று தெரிந்தும் தமிழக அரசு பத்திரப் பதிவு செய்த உடன் பட்டா மாறும் திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இது பற்றி அரசிடம் விரிவாக எடுத்துக் கூறியுள்ளோம். ஆனாலும் கிராம நிர்வாக அலுவலர்களின் அதிகாரம், பொறுப்பை பறித்து வேறு துறைக்கும் கொடுக்கும் இந்த நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது.

பத்திரப் பதிவு முடிந்ததும் பட்டா மாறும் திட்டத்துக்கு எதிர்ப்பு! – வி.ஏ.ஓ-க்கள் மவுன போராட்டம்
இதை எதிர்த்து வருகிற 3ம் தேதி முதல் கட்டமாக தாசில்தார் அலுவலகங்கள் முன்பு மவுனப் போராட்டம் நடத்த உள்ளோம்.
கொரோனா காலத்தில் மக்கள் பணியாற்றிய கிராம நிர்வாக அலுவலர்களில் சிலர் கொரோனாத் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர். அவர்கள் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். அவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்” என்றார்.