சிகிச்சையில் உள்ள மருத்துவர்களை கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுத்த எதிர்ப்பு! – சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

சிகிச்சையில் உள்ள மருத்துவர்களை கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுத்த எதிர்ப்பு! – சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

சர்க்கரை நோய் உள்ளிட்ட வேறு பாதிப்புகளுக்கு சிகிச்சை எடுத்து வரும் மருத்துவர்களை கொரோனா பணியில் தமிழக அரசு ஈடுபடுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு விளக்கம் அளிக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
சர்க்கரை நோய் உள்ளிட்ட சில பாதிப்பு உள்ளவர்களுக்கு கொரோனாத் தொற்று தீவிர பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று மருத்துவ உலகம் எச்சரிக்கிறது. இந்த நிலையில், இதய நோய், சர்க்கரை நோய் உள்ளிட்ட பாதிப்பு உள்ள மருத்துவர்களை கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுத்தக் கூடாது என்று உத்தரவிடப்பட்டு இருந்தது.

சிகிச்சையில் உள்ள மருத்துவர்களை கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுத்த எதிர்ப்பு! – சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

ஆனால், இந்த உத்தரவை மீறி, சர்க்கரை நோய் உள்ளிட்ட பாதிப்பு உள்ள மருத்துவர்களைக் கூட கொரோனா தடுப்புப் பணியில் தமிழக அரசு ஈடுபடுத்தி வருவதாக சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கம் குற்றம்சாட்டியிருந்தது. சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை தவிர்த்து மற்ற மருத்துவமனைகளில் விதிமுறை மீறல் நடந்து வருகிறது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் அந்த அமைப்பு வழக்கும் தொடர்ந்தது.

சிகிச்சையில் உள்ள மருத்துவர்களை கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுத்த எதிர்ப்பு! – சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

இந்த வழக்கை நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு விசாரணை செய்தது. அப்போது, “ஏராளமான மருத்துவர்கள் கொரோனா

சிகிச்சையில் உள்ள மருத்துவர்களை கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுத்த எதிர்ப்பு! – சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

பாதிப்புக்கு ஆளாகி இருப்பதாகவும், நோய் பாதிப்பு உள்ள மருத்துவர்களையும் கூட அரசு பயன்படுத்தி வருவது மருத்துவர்களை சோர்வடையச் செய்துள்ளது” என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து இந்த புகார் தொடர்பாக வருகிற 21ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று தமிழக சுகாதாரத் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.