பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு… டயர், நுங்கு வண்டிகளை ஓட்டி மாணவர் அமைப்பினர் போராட்டம்!

 

பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு… டயர், நுங்கு வண்டிகளை ஓட்டி மாணவர் அமைப்பினர் போராட்டம்!

கோவை

கேவையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, இந்திய மாணவர் சங்கத்தினர் சாலையில் டயர் மற்றும் நுங்கு வண்டிகளை ஓட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில், அதனை குறைக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கடந்த 3 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, இன்று கோவையில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு… டயர், நுங்கு வண்டிகளை ஓட்டி மாணவர் அமைப்பினர் போராட்டம்!

கோவை பி.எஸ்.என்.எல் தலைமை அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான இளைஞர்கள் கலந்துகொண்டு பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினர். மேலும், மத்திய அரசுக்கு எதிரான முழக்கங்களையும் எழுப்பி கோஷமிட்டனர்.

தொடர்ந்து, தலையில் ஹெல்மட் அணிந்தபடி சிறுவர்கள் விளையாட பயன்படுத்தும் இருசககர வாகன டயர்கள் மற்றும் நுங்கு வண்டிகளை சாலைகளில் ஓட்டிய படி ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்றனர். மாணவர் அமைப்பினரின் இந்த நூதன முறையிலான போராட்டம் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது.