ஐடிபிஎல் -க்கு எதிர்ப்பு! 6 மாவட்டத்தில் தொடர் காத்திருப்பு போராட்டம்

ஐடிபிஎல் -க்கு எதிர்ப்பு! 6 மாவட்டத்தில் தொடர் காத்திருப்பு போராட்டம்

கோவை இருகூர் – பெங்களூர் வரை பாரத் பெட்ரோலியத்தின் ஐடிபிஎல் எண்ணெய் குழாய் திட்டத்தை கொரோனா காலத்தை பயன்படுத்தி விவசாயிகளை நசுக்கி திட்டத்தை நிறைவேற்ற முயற்சிப்பதை கைவிட்டு, கெயில் திட்டத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தபடி இத்திட்டத்தினையும் சாலையோரமாக செயல்படுத்த உத்தரவிடக்கோரி, ஈரோடு உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று முதல் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெறுகிறது.

ஐடிபிஎல் -க்கு எதிர்ப்பு! 6 மாவட்டத்தில் தொடர் காத்திருப்பு போராட்டம்

ஈரோடு கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று 14/09/2020 ஐடிபிஎல் திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள் தொடங்க உள்ள காத்திருப்புப் போராட்டம் தொடர்பான பேச்சுவார்த்தையில், அரசு தரப்பில் கோட்டாட்சியர், சைபுதீன்அரச்சலூர் , ஆய்வாளர் சண்முகசுந்தரம் ஆகியோரும் விவசாயிகள் தரப்பில்

ஐடிபிஎல் -க்கு எதிர்ப்பு! 6 மாவட்டத்தில் தொடர் காத்திருப்பு போராட்டம்

ஒருங்கிணைப்பாளர்கள் முனுசாமி, கி.வே.பொன்னையன் மொடக்குறிச்சி பொறுப்பாளர்கள் கண்ணுசாமி, தங்கராசு, முருகேசு , ஊஞ்சப்பாளையம் மாதேஸ்வரன் அரச்சலூர் புலவர் திருநாவுக்கரசு ஆகியோர் கலந்து கொண்டனர். அது மிக நீண்ட பேச்சுவார்த்தையாக இருந்தது.

ஐடிபிஎல் -க்கு எதிர்ப்பு! 6 மாவட்டத்தில் தொடர் காத்திருப்பு போராட்டம்

போராட்டத்தின் நோக்கமே அரசியல் அரங்கில் இதை ஒரு பிரச்சனையாக மாற்றுவது தான் என்கிறார்கள். மேலும், எங்களை திரும்பிப் பார்க்கும் நேரம் வந்துகொண்டுள்ளது. இப்போது தான் எங்கள் குறையை வீதிக்கு வந்து சொல்ல முடியும் எனத் தெளிவாக என்கிறார்கள்.

ஐடிபிஎல் -க்கு எதிர்ப்பு! 6 மாவட்டத்தில் தொடர் காத்திருப்பு போராட்டம்

நல்ல முடிவைச் சொல்லுங்கள் என கோட்டாட்சியர் வேண்டுகோள் வைத்தார். ஆறு மாவட்டமும் கலந்து சொல்கிறோம் என தெரிவித்துவிட்டு வந்திருக்கிறார்கள். அதன்படி இன்றுமுதல் போராட்டம் நடைபெறுகிறது.