• April
    05
    Sunday

Main Area

Main



அடி மேல் அடி! வரிந்து கட்டும் எதிர்க்கட்சிகள்! சமாளிப்பாரா பிரதமர் மோடி!

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

கடந்த சில தினங்களுக்கு முன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பேசுகையில், நாட்டின் பொருளாதாரத்தில் வளர்ச்சிதான் குறைந்துள்ளது, வீழ்ச்சி ஏற்படவில்லை, அது நிகழவும் செய்யாது என நம்பிக்கை அளிக்கும் விதமாக பேசியிருந்தார். இந்நிலையில், கடந்த செப்டம்பர் காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 4.5 சதவீதமாக சரிவு கண்டுள்ளது. 

எதிர்க்கட்சிகள்

அடுத்து நிதிப்பற்றாக்குறை நிலவரமும் மத்திய அரசுக்கு சாதகமாக இல்லை. இந்த நிதியாண்டின் முதல் 7 மாதங்களிலேயே நாட்டின் நிதிப்பற்றாக்குறை மத்திய பட்ஜெட்டில் நிர்ணயித்த இலக்கில் 102 சதவீதத்தை எட்டி விட்டது. அதாவது கட்டுப்பாட்டை இலக்கை காட்டிலும் நிதிப்பற்றாக்குறை உயர்ந்து விட்டது. நிதிப்பற்றாக்குறை கட்டுப்பாட்டுக்குள் வைக்க வேண்டுமானால் செலவினங்களை சுருக்குவதோடு, வருவாய் அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். செலவினங்களை குறைத்தால் வளர்ச்சி திட்டங்களில் பாதிப்பு ஏற்படும்.

நிர்மலா சீதாராமன்

கடந்த அக்டோபர் மாதத்தில் முக்கிய 8 துறைகளின் உற்பத்தி 5.8 சதவீதம் குறைந்துள்ளது. இதனால் அந்த மாதத்தில் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சியும் வீழ்ச்சி கண்டு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இந்த விவகாரங்களை எதிர்க்கட்சிகள் கட்டாயம் கையிலெடுக்கும். எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு பிரதமர் மோடியும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் என்ன பதில் சொல்ல போகிறார்கள் என்பது தெரியவில்லை. அதேசமயம் வரும் வாரம் நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் கேள்விகளால் ஒரு கலக்கு கலக்கி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2018 TopTamilNews. All rights reserved.