கோவிட்-19 தடுப்பூசி இலவசம்.. பா.ஜ.க.வின் தேர்தல் வாக்குறுதியை கடுமையாக விமர்சித்த எதிர்க்கட்சிகள்

கோவிட்-19 தடுப்பூசி இலவசம்.. பா.ஜ.க.வின் தேர்தல் வாக்குறுதியை கடுமையாக விமர்சித்த எதிர்க்கட்சிகள்

கோவிட்-19 தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்ற பா.ஜ.க.வின் பீகார் தேர்தல் வாக்குறுதியை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.

எதிர்வரும் பீகார் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு பா.ஜ.க. நேற்று தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதில் முதல் மற்றும் முக்கிய வாக்குறுதியாக பீகார் மக்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என வாக்குறுதி அளித்துள்ளது. இதனை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளன.

கோவிட்-19 தடுப்பூசி இலவசம்.. பா.ஜ.க.வின் தேர்தல் வாக்குறுதியை கடுமையாக விமர்சித்த எதிர்க்கட்சிகள்
ரன்தீப் சிங் சுர்ஜேவாலா

காங்கிரஸ் பொதுசெயலாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா இது தொடர்பாக கூறியதாவது: புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நெருக்கடியின்போது, பீகாரின் முதல்வரும், துணை முதல்வரும் பீகாரிகளை உள்ளே நுழைய விடமாட்டோம் என்றார்கள். ஒரு ஆண்டுக்குள் கொரோனா வைரஸ் தடுப்பூசி தயாரிக்க சாத்தியமில்லை என்று பிரதமர் தெரிவித்தார். கோவிட் காரணமாக ஆயிரம் பிகாரிகள் இறந்தனர். மத்திய அமைச்சர்கள் கவலைப்படுகிறார்களா? அவர்கள் பீகார் மக்களை கேலி செய்கிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கோவிட்-19 தடுப்பூசி இலவசம்.. பா.ஜ.க.வின் தேர்தல் வாக்குறுதியை கடுமையாக விமர்சித்த எதிர்க்கட்சிகள்
பா.ஜ.க.

காங்கிரஸ் கட்சியின் மற்றொரு பிரபல தலைவர் கவுரவ் கோகோய் டிவிட்டரில், பீகார் மக்கள் பா.ஜ.க.வுக்கு வாக்களிக்கவில்லை என்றால், பிரதமர் அவர்களுக்கு தடுப்பூசி வழங்கமாட்டாரா? இது ஜனநாயகம் அல்ல. இது கொடுங்கோன்மை. பீகார் மக்கள் மிரட்டப்பட மாட்டார்கள். எந்தவொரு சக்தியும் அவர்களின் உரிமைகளை மறுக்க முடியாது. டெல்லியின் கொடுமைக்காரர்களை அவர்கள்(மக்கள்) தங்கள் வாக்குகளால் நிராகரிப்பார்கள் என பதிவு செய்து இருந்தார். பீகாரின் முக்கிய எதிர்க்கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளம், பீகார் மக்கள் பணத்துக்காக தங்களது எதிர்காலத்தை விற்க மாட்டார்கள் என தெரிவித்துள்ளது.