சாத்தான்குளம் விவகாரத்தை அரசியலாக்கும் எதிர்க்கட்சிகள்! – பா.ஜ.க கண்டனம்

சாத்தான்குளத்தில் நடந்த சம்பவத்தை தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அரசியலாக்குவதாக தமிழக பா.ஜ.க தலைவர் முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.
சாத்தான்குளத்தில் தந்தை. மகன் உயிரிழந்த சம்பவத்தை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையே நேரடியாக விசாரித்து வருகிறது. சாத்தான்குளம் காவல் நிலையத்துக்கு விசாரிக்கச் சென்ற அமர்வு நீதிமன்ற நீதிபதியையே அவதூறாக திட்டியதாக புகார் வந்துள்ளது. வழக்கு தொடர்பாக போலீசார் ஒத்துழைக்க மறுப்பதாக நீதிமன்றம் குற்றம்சாட்டியுள்ளது. ஆனால், இதெல்லாம் சாதாரண விஷயம் என்பது போல தமிழக பா.ஜ.க பேசி வருகிறது.

கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த தமிழக பா.ஜ.க தலைவர் முருகன், “மத்திய அரசின் சாதனைகளை வீடுவீடாகச் சென்று எடுத்துக் கூறி வருகிறோம். ராமர் கோவில், காஷ்மீர் விவகாரம் என்று பல ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருந்த பிரச்னைகள் கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள 1.75 லட்சம் கோடி நிவாரணம் வழங்கியிருப்பது பற்றி கூறி வருகிறோம்.
தமிழகத்தில் ஒரு கோடி பேருக்கு தமிழக பா.ஜ.க சார்பில் உணவு வழங்கப்பட்டுள்ளது. 30 லட்சம் பேருக்கு மோடி கிச்சன் என்ற மளிகைப் பொருள் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது.
சாத்தான்குளம் விவகாரத்தை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்ற தமிழக அரசு முடிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த சம்பவத்தை அரசியலாக்குவது சரியில்லை. ஒரு சிலர் செய்த தவறுக்காக ஒட்டுமொத்த காவல்துறையையும் குறைகூறுவது சரியில்லை” என்றார்.

- Advertisment -

Most Popular

பாலியல் தொழிலாளர்களை பாடாய் படுத்தும் கொரானா-கஸ்டமர் வராததால் பெரும் கஷ்டத்தில் வாடும் நிலை ..

கொரானாவால் எந்த தொழிலையும் மாஸ்க் போட்டுகொண்டு,ம் சமூக இடைவெளியுடனும் செய்யலாம் .ஆனால் பாலியல் தொழிலை அப்படி நடத்த முடியுமா ?முடியாது ,அதனால் அதை தவிர வேறு தொழில் எதுவும் தெரியாத பாலியல் தொழிலாளர்கள்...

மாஸ்க் போடவில்லை என்றால் மீன் மார்க்கெட்டில் அனுமதிக்க கூடாது – அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் சென்னை காசிமேட்டில் பொதுமக்களுக்கு மீன் சில்லறை விற்பனை நடைபெறாது என்றும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இடத்தில் மீன் விற்பனை செய்யலாம், தற்போது துறைமுகத்தில் சில்லறை விற்பனை செய்யும் வியாபரிகளுக்கு...

“காதலிக்க நான் ,கல்யாணத்துக்கு அவனா?”-இரண்டாவது கல்யாணம் செய்யவிருந்த பெண்ணை கொன்ற காதலன் ..

தான் காதலித்த பெண் தன்னை கழட்டி விட்டுவிட்டு ,வேறொருவரை திருமணம் செய்ய இருப்பதை கேள்விப்பட்ட அவரின் காதலன் அவரை திருமணத்தன்றே பியூட்டி பார்லரிலேயே கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது . மத்தியபிரதேச மாநிலம் ரத்தலம்...

மாஸ்டர் வார்த்தை நீக்கம்… பேர் அண்ட் லவ்லியைத் தொடர்ந்து ட்விட்டர் எடுத்த அதிரடி நடவடிக்கை!

ஒருபுறம் கொரோனா என்ற கொடூரன் மக்களின் உயிரை வாரி சுருட்டிக் கொண்டு போய்க்கொண்டிருக்க மறுபுறம் மனிதர்கள் மீது மனிதர்களே நிகழ்த்தும் வன்மங்கள் வெடித்துக் கொண்டிருக்கின்றன. அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்டு என்ற கறுப்பினத்தைச் சேர்ந்த நபர்...
Open

ttn

Close