“வேளாண் சட்டங்களை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குகின்றன” – வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு

“வேளாண் சட்டங்களை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குகின்றன” – வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு

கோவை

மத்திய அரசின் வேளாண் சட்டங்களின் நன்மைகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, கோவையில் பாஜக சார்பில் டிராக்டர் ஊர்வலம் நடைபெற்றது. இதில், அந்த கட்சியின் தேசிய மகளிர் அணி செயலாளர் வானதி சீனிவாசன் கலந்துகொண்டு பேரணியை கொடியசைத்து தொடங்கிவைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெல்லியில் விவசாயிகள் போராட்டம் என்ற பெயரில் அப்பாவி விவசாயிகளின் வாழ்க்கையோடு, எதிர்க்கட்சிகள் விளையாடுவதாக குற்றம்சாட்டினார்.

“வேளாண் சட்டங்களை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குகின்றன” – வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு

காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதுவரை தங்களின் தேர்தல் அறிக்கைகளில் விளை பொருட்களுக்கான சந்தையை உருவாக்குவோம் என கூறிவந்த நிலையில், அதனை பிரதமர் மோடி சட்டமாக்கியபோது எதிர்ப்பதாக குற்றம்சாட்டினார். தொடர்ந்து பேசிய அவர், கொரோனா காலத்தில் பொதுமக்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வரும் நிலையில், நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருவதாக தெரிவித்தார்.