“ஆட்சியை கவிழ்க்க எதிர்க்கட்சிகள் சதி” : பேரவையில் புலம்பும் நாராயணசாமி

 

“ஆட்சியை கவிழ்க்க எதிர்க்கட்சிகள் சதி” : பேரவையில் புலம்பும் நாராயணசாமி

புதுச்சேரி மக்கள் எங்கள் ஆட்சி மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

“ஆட்சியை கவிழ்க்க எதிர்க்கட்சிகள் சதி” : பேரவையில் புலம்பும் நாராயணசாமி

பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் புதுச்சேரி சட்டமன்றம் கூடி நடந்து வருகிறது. புதுச்சேரி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கு கோரும் தீர்மானத்தை முன்மொழிந்தார் நாராயணசாமி. நம்பிக்கை வாக்கு கோரும் தீர்மானத்தின் மீது முதல்வர் நாராயணசாமி பேசி வருகிறார். அப்போது சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் பழனிசாமி, “புதுச்சேரியில் காங்கிரஸ் அரசுக்கு பெரும்பான்மை உள்ளது. கடந்த என்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில் விட்டு சென்ற பணிகள் திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம் என 4 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் செய்த திட்டங்கள் பணிகள் குறித்து நாராயணசாமி பேசி வருகிறார் .

“ஆட்சியை கவிழ்க்க எதிர்க்கட்சிகள் சதி” : பேரவையில் புலம்பும் நாராயணசாமி

தொடர்ந்து பேசிய அவர், கொரோனா காலகட்டத்தில் சில தலைவர்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்தனர்.புதுச்சேரி மக்கள் எங்கள் மேல் ஆட்சி மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள். கிரண்பேடி அளித்த நெருக்கடியை கடந்த ஆட்சியை நிறைவு செய்துள்ளோம். நான்கு ஆண்டுகளாக எங்களை எதிர்கொள்ள முடியாத எதிர்க்கட்சிகள் தற்போது அஸ்திரங்களை எடுத்துள்ளனர்.எவ்வளவு இன்னல் வந்தாலும் புதுச்சேரி மக்களுக்காக இரவு பகல் பாராமல் போராடினோம்.மாநிலத்தில் வருமானத்தை குறைக்க வேண்டும் என்று சதி திட்டம் தீட்டினார்கள். இப்போது மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள் எல்லாம் தற்போது ஒன்று சேர்ந்து கொண்டு ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்கிறார்கள்” என்றார்.