சீன செயலிகள் தடை எந்த நோக்கத்துக்கு உதவும்?.. நாம் டிஜிட்டல் உலகில் வாழ்கிறோம்…. பொங்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள்

சீன செயலிகள் தடை எந்த நோக்கத்துக்கு உதவும்?.. நாம் டிஜிட்டல் உலகில் வாழ்கிறோம்…. பொங்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள்

இந்தியாவின் இறையாண்மை மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி செல்போன் மற்றும் இதர மின்னணு கருவிகளில் பயன்படுத்தக்கூடிய டிக்டாக், ஷேர் இட் மற்றும் கேம் ஸ்கேனர் உள்பட 59 சீன செயலிகளுக்கு நேற்று முன்தினம் மத்திய அரசு தடை விதித்தது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு நாட்டு மக்கள் பலத்த ஆதரவை தெரிவித்து வருகின்றனர். அதேசமயம் கம்யூனிஸ்ட் கட்சிகள், திரிணாமுல் காங்கிரஸ் உள்பட சில எதிர்க்கட்சிகள் சீன செயலிகளுக்கான தடையை விமர்சனம் செய்துள்ளன.

சீன செயலிகள் தடை எந்த நோக்கத்துக்கு உதவும்?.. நாம் டிஜிட்டல் உலகில் வாழ்கிறோம்…. பொங்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் டி.ராஜா இது தொடர்பாக கூறுகையில், சீன செயலிகளை தடை செய்வது எந்த நோக்கத்துக்கு உதவும் என்பதை அரசு நாட்டுக்கு சொல்ல வேண்டும். மோதலை தீர்க்க பேச்சுவார்த்தைகளும் மற்றும் உயர்மட்ட அளவில் பேச்சுவார்த்தைகளும் மேற்கொள்ள வேண்டும் என நாங்கள், இடதுசாரி கட்சிகள் நம்புகிறோம். நாம் டிஜிட்டல் உலகில் வாழ்கிறோம். இந்த நடவடிக்கை சீனாவுடானா தற்போதைய நிலைப்பாட்டுக்கு எவ்வளவு தூரம் உதவும்? என கேள்வி எழுப்பினார்.

சீன செயலிகள் தடை எந்த நோக்கத்துக்கு உதவும்?.. நாம் டிஜிட்டல் உலகில் வாழ்கிறோம்…. பொங்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் முகமது சலீம் டிவிட்டரில், நரேந்திர மோடிக்கு நமது MAPஐ பாதுகாக்க வேண்டியிருந்தது, அவர் APPஐ தடை செய்து பதிலடி கொடுத்தார் என கிண்டலாக பதிவு செய்து இருந்தார். திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சவுகதா ராய் கூறுகையில், ஒவ்வொரு செல்போனிலும் இந்த செயலிகள் இருக்கும்போது அரசாங்கம் எப்படி அதை தடை செய்யும். பா.ஜ.க. தேசபக்தியில் தீவிர நம்பிக்கை கொண்டுள்ளது. ஆனால் நாங்கள் தேசியவாதத்தை நம்புகிறோம். சீனா மீது சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தி பா.ஜ.க. நமது நிலப்பரப்பை திரும்ப பெற வேண்டும் என தெரிவித்தார்.